​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வெளிநாடுகளில் உடல்உழைப்பு சார்ந்த பணிக்காக செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவு

வெளிநாடுகளில் உடல்உழைப்பு சார்ந்த பணிக்காக செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 2015 முதல் 2017 வரையிலும் பாதியாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேற்காசிய நாடுகள் உட்பட 18 வெளிநாடுகள் உடல் உழைப்பு சார்ந்த இந்தியர்களின் தேர்வாக கருதப்படுகின்றன. இந்த நாடுகளில், 2015ம் ஆண்டில் சுமார்...

தஞ்சை - திருச்சி இடையே இரட்டை ரயில்பாதை இறுதிக்கட்ட பணிகள்

தஞ்சை திருச்சி இடையிலான இரட்டை ரயில் பாதை அமைக்கும் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இரு நகரங்களிடையே 49 கிலோ மீட்டர் தூரத்திற்கு 450 கோடி ரூபாய் செலவில், இரட்டை ரயில்பாதை அமைக்கப்படுகிறது. இதில் 13 பெரிய பாலங்கள், 90 சிறிய...

ஆசிரியர்கள் பணிக்கு வராததால் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பொருட்களை அடித்து நொறுக்கி அட்டகாசம்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை அருகே, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.  செம்மணந்தல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் அன்பழகன், பட்டதாரி ஆசிரியர் சுகந்தி உள்ளிட்டோர் மாணவர்கள் மத்தியில்...

சென்னையில் ஏர்செல் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டம்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏர்செல் அலுவலகத்தில் ஏராளமான வாடிக்கையாளர்கள் திரண்டு முற்றுகைப் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏர்செல் நிறுவனம் திவால் ஆனதை அடுத்து, லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் மற்ற தொலைத்தொடர்ப்பு நிறுவனங்களின் சேவைக்கு மாறி வருகின்றனர். செல்போன் எண்ணை மாற்றாமல், ஒரு...

ஸ்ரீரங்கம் கோபுரத்திற்கு அருகில் கட்டடப் பணி தடுத்து நிறுத்தம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் ராஜ கோபுரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தொடங்கிய கட்டடப் பணி இந்து அறநிலையத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 21 கோபுரங்களைக் கொண்ட இக்கோவிலின் ராஜகோபுரம் 220 அடி உயரம் கொண்டது. 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த இதனை பாதுகாக்கும்...

3 வெளிமாநிலத் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில், நூற்பாலையில் பணியாற்றும் 13 பேரை கைது செய்து விசாரணை

திண்டுக்கல் அருகே நூற்பாலையில் பணியாற்றிய 3 வெளிமாநிலத் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில், அதே நூற்பாலையைச் சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் திருச்சி சாலையில் வடமதுரை அருகே  பண்ணாரி நூற்பாலை  இயங்கி வருகிறது. இந்த நூற்பாலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த...

மீட்புப் பணிகளில் அரசின் செயல் பாராட்டுக்குரியது - மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்

குரங்கணி காட்டுத்தீ மீட்புப் பணிகளில் அரசின் செயல் பாராட்டுக்குரியது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குரங்கணி காட்டுத்தீ சம்பவத்தைப் பாடமாக எடுத்துக் கொண்டு இனிவரும் காலங்களில் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்க...

ஆதிச்சநல்லூரில் வேலி அமைக்கும் பணிகள் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில், அகழாய்வுப் பணி மீண்டும் தொடங்க உள்ள  நிலையில், அங்கு வேலி அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.  ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என காமராசு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு...

மகளிர் தின வாழ்த்துக்களை பெண் துப்புரவாளர் அகற்றியதற்காக Oxford மன்னிப்பு கோரியது

இங்கிலாந்தில் மகளிர் தின வாழ்த்துக்கள் என்ற எழுத்தை படிக்கட்டிலிருந்து பெண் துப்புரவாளர் அகற்றிய புகைப்படம் வெளியானதையடுத்து ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மன்னிப்பு தெரிவித்துள்ளது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கிளாரன்டன் கட்டிட படிக்கட்டில் ‘ஹேப்பி இன்டர்நேஷனல் வுமென்ஸ் டே’ என எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து அதை அங்கிருந்த பாதுகாவலர்கள்...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கிய துப்புரவுத் தொழிலாளி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கிய துப்புரவுத் தொழிலாளியை, ரயில்வே பாதுகாப்புப்படை தலைமைக்காவலர் காப்பாற்றிய காட்சிகள் வெளியாகியுள்ளன. 8-வது நடைமேடையில் நேற்றிரவு வழக்கம்போல ஒப்பந்த ஊழியர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அம்பத்தூரைச் சேர்ந்த ஆண்டியப்பன் என்ற ஊழியர் திடீரென மின்சாரம்...