​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் பாலம் கட்டும் பணிகள் குறித்து ஆய்வு

திருச்சி மாவட்டம் கல்லணை கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்டுமானப் பணிகளை, திருச்சி என்.ஐ.டி. பேராசிரியர்களும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். கல்லணை கொள்ளிடம் மதகு பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லாததால், 67 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலத்திற்கான கட்டுமானப்...

தெலங்கானாவில் அரசு வேலைக்கு இளைஞர்கள் போட்டா போட்டி

தெலங்கானாவில் அரசு அலுவலக எழுத்தர் பணிக்கு பொறியியல், பிஎச்டி படித்த பட்டதாரிகள் உள்பட 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். 700 காலிப் பணியிடங்களுக்கு, பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு விண்ணப்பித்தவர்களில் 372 பேர் பிஎச்டியும், 539 பேர் எம்.பில்லும்...

தாம் எடுத்த முடிவானது இதர தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை - இலங்கை அதிபர்

தொலைபேசி அழைப்பை ஏற்காத காரணத்தால் ஆஸ்திரியாவுக்கான தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்து சர்ச்சையில் சிக்கிய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளார். கடந்த வாரம் அவசரமாக ஆஸ்திரியாவில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை, அதிபர் சிறிசேனா தொலைப்பேசி...

சமூகவலைத்தள பயன்பாட்டால் விமானியின் தூக்கம் கெட்டதே, 2013ஆம் ஆண்டில் நேர்ந்த விபத்திற்கு காரணம் - விமானப் படை தளபதி

இரவிலும் சமூகவலைத்தளங்களில் நேரத்தை செலவிட்டு விமானியின் தூக்கம் கெட்டதே, இந்திய விமானப் படையின் ஜெட் விமானம் 2013ஆம் ஆண்டில் விபத்தில் சிக்கியதற்கு காரணம் என்று விமானப் படை தளபதி பி.எஸ்.தனோவா கூறியுள்ளார். பெங்களூரில், Indian Society of Aerospace Medicine கருத்தரங்கில்...

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த போலி IAS கைது

ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடித்து வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 3 கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு ஒன்றை அளித்தார்....

ஆப்பிள் நிறுவனத்தின் புது ரக ஐபோனில் டூயல் சிம் வசதி அறிமுகம்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட டூயல் சிம் வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாடல்களில் கொண்டுவரப்பட்டுள்ளது. இரண்டு சிம் கார்டுகள் வசதி இல்லாதது, ஐபோன் வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய குறையாகவே இருந்து வந்த நிலையில், அதனைப் போக்கும் விதமாக ஐபோன் 10 எஸ்,...

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோரிடம் பாகுபாடு காட்டினால் சிறை தண்டனை - மத்திய சுகாதாரத்துறை

ஹெச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் பாகுபாடு பார்ப்போருக்கு தண்டனையளிக்கும் சட்டம் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்திருப்பதாக, மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை தர மறுப்பதும், நிறுவனங்களில் பணியில் இருந்து நீக்குவதும் குற்றம் என்று...

குட்கா விவகாரத்தில் தாம் நேர்மையாக பணிபுரிந்து உள்ளதாக விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார் விளக்கம்

குட்கா விவகாரத்தில் தாம் நேர்மையாக பணிபுரிந்து உள்ளதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்து தற்போது விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருக்கும் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், பணம்...

அரசியல் சார்ந்த விளம்பரங்களில் அதிக வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்படும் - கூகுள் நிறுவனம்

அரசியல் சார்ந்த விளம்பரங்களில் அதிக வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்படும் என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டில் அடுத்தடுத்து ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தேர்தல் சமயங்களில் கூகுள் தளத்தில் வெளியிடப்படும்...

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்தி பணி வழங்கப்படும் - செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 82 ஆயிரம் பேர் ஆசிரியர் தகுதி...