​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமித்ததை எதிர்த்து நடிகர் விஷால் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு

நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமித்ததை எதிர்த்து நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் செயல்படவில்லை என்பதால் தனி அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐ.ஜி. கீதாவை நியமித்து தமிழ்நாடு அரசு நேற்று உத்தரவிட்டிருந்தது. இதற்கு தடை...

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பதிவுத்துறை நோட்டீஸ்..

நடிகர் சங்கத்தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் அக்டோபர் 15ம் தேதி எண்ணப்படவுள்ள நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன் மற்றும் செயலாளர் விஷாலுக்கு பதிவுத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கம் உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த 2018ம் ஆண்டு...

கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜர்

வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விஷால் சரணடைந்ததை தொடர்ந்து, கைது வாரண்டை எழும்பூர் நீதிமன்றம் திரும்ப பெற்றது. சென்னையில் நடிகர் விஷாலுக்கு சொந்தமான நிறுவனம் 5 ஆண்டுகளாக பணியாளர்களிடம் பிடித்தம் செய்த வரியை செலுத்தவில்லை...

விஷால் மீது வழக்கு

ஊழியர்களிடம் பிடித்தம் செய்த வருமான வரியை செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் விஷால், ஆகஸ்ட் 2 ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வடபழனியில் நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது....

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதிக்க முடியாது

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை தற்போது எண்ணுவதற்கு அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி விட்டது. நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கு திங்கள் கிழமை அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,...

நடிகர் விஷால் ரூ.1 கோடி சேவை வரி ஏய்ப்பு செய்ததாக புகார்

நடிகர் விஷால்,1 கோடி ரூபாய் சேவை வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பான விசாரணையை, வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு, நடிகர் விஷாலின் அலுவலகத்தில் சேவை வரித்துறையினர் நடத்திய சோதனையில், அவர் ஒரு கோடி...

நடிகர் சங்க தேர்தல் நிறைவு...

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட ஏராளமான நடிகர் நடிகையர் வாக்களித்தனர். தபால் வாக்கு படிவம் சென்று சேராததால் மும்பையிலுள்ள ரஜினிகாந்த் வாக்களிக்கவில்லை. நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதும் நடிகர்...

திட்டமிட்டபடி தேர்தல்.. உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்..!

நடிகர் சங்க தேர்தலை சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் மேல்நிலைப்பள்ளியில் நடத்த அனுமதி வழங்கிய உயர்நீதிமன்றம், காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், உறுப்பினர்கள்...

நாளை நடிகர் சங்கத் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் மும்முரம்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நாளை நடைபெறுவதையொட்டி அதற்கானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் விடுபட்டுள்ளதாக வந்த புகாரால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து விஷால் தரப்பினர் உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில்,...

நடிகர் சங்க தேர்தலை நடத்த உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை திட்டமிட்டபடி 23-ஆம் தேதி நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த தேர்தலில் வாக்காளர் சேர்க்கை மற்றும் நீக்கத்தில் குளறுபடி இருப்பதால், நிறுத்தி வைப்பதாக சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால்...