​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மகேந்திரா நிறுவனம், வரும் 2040 ஆம் ஆண்டுக்குள் புகை மாசை வெளியேற்றாத வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டம்

மகேந்திரா நிறுவனம், வரும் 2040 ஆம் ஆண்டுக்குள் புகை மாசை வெளியேற்றாத வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதி அமைப்புடன் இணைந்து செயல்பட்டு புகை மாசற்ற வாகனங்களைத் தயாரிக்கும் இலக்கை அடைய திட்டமிட்டிருப்பதாக மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா...

வங்கதேசத்தில் ஐ.நா.தூதரக வாகனங்கள் மீது தாக்குதல்

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் ஐ.நா. தூதரக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தபட்டன. வங்கதேசத்துக்கான ஐ.நா.தூதர் மார்சியா பெர்னிகாட்டும் (Marcia Bernicat) அவரது அதிகாரிகளும் சென்ற கார்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் யாருக்கும் காயம் இல்லை என்றாலும் இரண்டு கார்கள்...

விதிகளை மீறும் வாகனங்கள்..! போக்குவரத்து போலீசார் அலட்சியத்தால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு

சென்னையில் விதிகளை மீறும் வாகனங்கள், அதை முறைப்படுத்தாத போக்குவரத்து போலீசாரின் அலட்சியம் காரணமாக நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. போக்குவரது நெரிசலில் நாள் தோறும் சிக்கி தவிக்கும் ஒரு சில பகுதிகளின் மூலம் பொதுமக்கள் எவ்வளவு சிரமத்திற்குள்ளாகின்றனர் என்பதை...

கேரளாவுக்கு சரக்கு ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களுக்கு திடீர் தடை

கேரளாவுக்கு சரக்கு வாகனங்கள் செல்ல நெல்லை மாவட்டம் கோட்டைவாசல் ஆரியங்காவு வனப்பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மிகவும் கடினமான வளைவுகள் மற்றும் அதல பாதாளம் மிக்க மலைப்பாதையில் வாகனங்கள் ஆயிரக்கணக்கில் சரக்குகளை ஏற்றிச் செல்வதால் இந்த தடத்தில் அடிக்கடி சாலைகள் பழுதாகின்றன. தற்போது தென்மேற்குப்...

போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.37 கோடி சொகுசு கார்கள் மீது புல்டோசர் ஏற்றி சேதம்

ஃபிலிப்பைன்சில் போதை ஒழிப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக போதைப் பொருள் கடத்தப் பயன்படுத்தப்பட்ட 37 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்கள் புல்டோசர் மூலம் நசுக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே (Rodrigo Duterte) போதைப் பொருள் ஒழிப்பில் தீவிரம் காட்டி வருவதோடு,...

முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்களை பின்தொடர்ந்த 4 பேர் கைது

சென்னையில் முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்களை பின்தொடர்ந்து, அவரது வீட்டின் வளாகத்தில் அத்துமீறி  நுழைந்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு சேலத்திலிருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விமான நிலையத்திலிருந்து பாதுகாப்பு வாகனங்களுடன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு சென்றார். அப்போது,...

செப்டம்பர் முதல் நாளில் இருந்து மூன்றாம் நபர் காப்பீடு இல்லாமல் வாகனங்களை விற்கக் கூடாது - உச்சநீதிமன்றம்

செப்டம்பர் முதல் நாளில் இருந்து 4சக்கர வாகனங்களுக்கு 2ஆண்டுகளும், இருசக்கர வாகனங்களுக்கு ஐந்தாண்டுகளும் மூன்றாம் நபர் காப்பீடு இல்லாமல் வாகனங்களை விற்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ அமர்த்தப்பட்ட வழக்கறிஞர் கவுரவ் அகர்வால், 66விழுக்காடு வாகனங்களில் மூன்றாமவர்...

திருப்பூரில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவருக்கு காயம்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அடுத்தடுத்து ஆறு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் காயமடைந்தனர். திருப்பூரில் இருந்து கட்டுமானப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கோவை நோக்கிச் சென்ற மினி ஆட்டோ ஒன்று அதிக பாரம் காரணமாக தெக்கலூர் அருகே திடீரென சாலை நடுவே கவிழ்ந்தது....

ரயில்வே அங்கீகாரம் பெற்ற பார்க்கிங்கில் கேட்பாரற்ற வாகனங்கள்

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள ரயில்வே அங்கீகாரம் பெற்ற டூவீலர் பார்க்கிங்கில் கேட்பாரற்று நிற்கும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் யாருடையது என விசாரணை நடைபெறவுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகத்தால் ஒப்பந்த அடிப்படையில் செயல்படும் டூவீலர் பார்க்கிங்...

மாசு கட்டுப்பாடு சான்று இல்லாத வாகனங்களுக்கு காப்பீடு வழங்க கூடாது - IRDAI

மாசு கட்டுப்பாடு சான்று இல்லாத வாகனங்களுக்கு காப்பீடு வழங்க கூடாது என்று காப்பீடு ஒழுங்குமுறை அமைப்பான ஐஆர்டிஏஐ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அனைத்து பொது காப்பீடு நிறுவனங்களுக்கும் ஐஆர்டிஏஐ மூலம் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் வாகனம்...