​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமெரிக்க சமூக வலைதளங்களில் அடிக்கடி விமர்சனத்துக்கு ஆளாகும் அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்பின் அலங்காரக் குறைபாடுகள் அந்நாட்டு சமூக வலைதளத்தில் உன்னிப்பாக கவனித்து விமர்சிக்கப்படும் நிலையில், அவரது ஷுவில் காகிதம் ஒட்டிதையும் தற்போது வைரலாக்கி வருகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் அவரது கொள்கைகளுக்கான சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுவதை விட, அவரது தனிப்பட்ட நடவடிக்கைகளே...

கழிவறைகள் இல்லாமல் இருப்பது மகளிருக்கு ஏற்கவே இயலாத துயரம் - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

கழிவறைகள் இல்லாமல் இருப்பது மகளிருக்கு ஏற்கவே இயலாத துயரம் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் கூறியுள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், வீடுகள், அலுவலகங்கள், பள்ளிகளில் கழிவறை இல்லாமல் இருப்பது, மகளிருக்கு ஏற்கவே முடியாத துயரம் என்றார். கழிவறை இல்லாத ஒரே...

ராமநாதபுரத்தில் கழிப்பறை கட்டும் திட்டத்தில் அதிகாரிகள் அடாவடி என புகார்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்வதற்கு பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆர்.எஸ். மங்களத்தை சேர்ந்த செல்வம் என்பவர், மாவட்ட திட்ட இயக்குனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 12...

கழிவறை சுத்தம் செய்யும் உபகரணங்களை வெளியே வைக்க வேண்டும் - மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கை

நெல்லை ரோஸ்மேரி பள்ளி தீ விபத்தைத் தொடர்ந்து, கழிவறை சுத்தம் செய்யும் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தையும் பள்ளிக் கட்டிடத்துக்கு வெளியே வைக்க அனைத்து மெட்ரிக் பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்வதற்கான பொருள்கள் வைக்கப்பட்டிருந்த...

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட கழிவறைப் பணிகள் நிறுத்தப்பட்டு 2 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதாகப் புகார்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட கழிவறைகள் பணிகள் அரைகுறையாக பாதியில் நிற்பதாக கிராமத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். சத்தியகண்டனூர் கிராமத்தில் 82 பயனாளிகளுக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது....

விமான கழிவறைகளைப் போல ரயில்களில் பயோ கழிவறைகளை அமைக்க நடவடிக்கை - பியூஷ் கோயல்

விமானங்களில் உள்ள கழிவறைகளைப் போல, ரயில்களில் உள்ள கழிவறைகளும் தரம் உயர்த்தப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், கடந்த 31-ஆம் தேதி வரை, ஏற்கனவே 37 ஆயிரத்து 411 ரயில் பெட்டிகளில்...

நெல்லையில் தூய்மை இந்தியா’ திட்டத்தில் கழிவறை கட்டுவதில் மோசடி

நெல்லையில், தனிநபர் கழிவறை கட்டும் திட்டத்தில் இறந்தவர்கள் பெயரை பயன்படுத்தி பணத்தை அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் கையாடல் செய்து மோசடி செய்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிவறை கட்ட ஒரு குடும்பத்துக்கு 12 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படுகிறது....

அமெரிக்கப் பொருட்களுக்கு ஜூலை 1 முதல் இறக்குமதி வரி : அமெரிக்காவுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிலடி

கனடாவில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்ததை அடுத்து, தாங்களும் அமெரிக்கப் பொருட்களுக்கு வரிவிதிக்க உள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ பதிலடி கொடுத்துள்ளார். கனடா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்...

பொதுக் கழிப்பிடத்திற்குள் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

சென்னை தேனாம்பேட்டையில்  பொதுக்கழிப்பிடத்திற்குள் எரிந்த நிலையில் காணப்பட்ட ஆண்சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர். வெங்கட்ராமன் தெருவில் உள்ள பொதுக்கழிப்பிடத்தின் பெண்கள் பகுதிக்குள் இருந்து புகை வருவதைப் பார்த்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார், மூடப்பட்டிருந்த கதவுகளை உடைத்து உள்ளே சென்று...

ரயிலின் கழிவறை நீரிலிருந்து டீ தயாரித்த விற்பனையாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபாராதம்

ரயிலின் கழிவறையில் இருந்து தண்ணீர் எடுத்து டீ தயாரித்த விற்பனையாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை- ஹைதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் நீல வண்ண சட்டை அணிந்த சில விற்பனையாளர்கள் கழிவறையில் இருந்து தண்ணீரை எடுத்து டீ தயாரித்து...