​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கர்நாடகாவைப் போல் மேற்குவங்கத்திலும் பாஜக குதிரைபேரம் : மம்தா

பாஜகவில் இணைய வற்புறுத்தி திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் பாஜக மிரட்டுவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி இருக்கிறார். தியாகிகள் தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், கர்நாடகாவில் நடப்பதை போல் மேற்குவங்கத்திலும்...

மசாஜ் பார்லரில் கத்தியை காட்டிய கைகளுக்கு மாவுகட்டு..!

சென்னையில் அனுமதியின்றி செயல்படும் மசாஜ் பார்லர்களுக்குள் புகுந்து, மசாஜ் செய்யும் பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி, பணம் மற்றும் நகை பறிக்கும் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மசாஜ் பார்லரை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டுத் தப்பி ஓடிய 3 கொள்ளையர்களின் கைகளில் மாவுகட்டுப்...

ஆய்வு கூட்டத்திற்கு அழைக்காததால் ஆத்திரமடைந்த பெண் எம்எல்ஏ

மத்திய பிரதேசத்தில், பாஜக பெண் எம்எல்ஏ ஒருவர், ஆய்வு கூட்டமொன்றில், அதிகாரிகளை மிரட்டும் காட்சி வெளியாகியுள்ளது. அம்மாநிலத்தின் விதிசா (Vidisha) தொகுதி சட்டமன்ற உறுப்பினராக, லீனா ஜெயின் உள்ளார். கியாராஸ்பூரில் (Gyaraspur) நடைபெற்ற, மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டத்திற்கு, அதிகாரிகள் இவரை அழைக்கவில்லை என...

காதலியை வரவழைப்பதற்காக விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டல் கடிதம் வைத்த தொழிலதிபர்

விமானத்தை கடத்தப் போவதாக உள்நோக்கத்துடன் மிரட்டல் விடுத்த மும்பை தொழிலதிபருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனையும் 5 கோடி ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த அக்டோபர் 30ம் தேதி மும்பையில் இருந்து டெல்லி செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் கழிவறை...

ரூ 2000 கோடி வசூலித்து தலைமறைவான நிதி நிறுவன உரிமையாளர்

பெங்களூரில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ள நிதி நிறுவன அதிபர் முகமது கான், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் 400 கோடி ரூபாய் பணத்தை வாங்கி திருப்பித் தராததால் தாம் தற்கொலை செய்யப்போவதாக அறிவித்துள்ளார். பெங்களூரில் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு...

சென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். மக்களவை மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 23ஆம் தேதி எண்ணப்படுகின்றன. தமிழகத்தில்...

அரசியல் பிரமுகர்கள் நடத்திய கடத்தல்..! சூதுகவ்விய பின்னணி

திருவண்ணாமலை அருகே சூதாட்டத்தில் வென்ற லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை பறிக்க, மரச்செக்கு எண்ணை ஆலை அதிபரை கடத்தி மிரட்டிய அரசியல் கட்சி பிரமுகர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை அடுத்த கலசப்பாக்கம் அருகே மேல ஆரணியைச் சேர்ந்த மரசெக்கு எண்ணெய் ஆலை அதிபர்...

விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப் போவதாக மிரட்டல், அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிப்பு

பாகிஸ்தானுக்கு விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மும்பையிலுள்ள ஏர் இந்தியா விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப் போவதாக மிரட்டல் விடுத்தான். இதையடுத்து...

ஜோத்பூரில் இருந்து தமிழகத்திற்கு வந்த ரயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, லஷ்கர் இ தொய்பா பெயரில் மிரட்டல்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து மன்னார்குடி செல்லும் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக, மர்ம நபர் மிரட்டல் விடுத்ததை அடுத்து, சென்னை அருகே ரயிலை நிறுத்தி சோதனை நடத்தப்படுகிறது. ஜோத்பூரில் இருந்து சென்னை வழியாக மன்னார்குடி செல்லும் ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு...

அலிகார் பல்கலையில் பயிலும் காஷ்மீர் மாணவர்கள் படிப்பைக் கைவிட்டு ஊர் திரும்புவோம் என எச்சரிக்கை

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பயிலும், ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாணவர்கள், படிப்பைக் கைவிட்டு ஊர் திரும்பப் போவதாக எச்சரித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் இருந்து ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலுகின்றனர். இந்நிலையில், இந்தியாவிற்கு எதிராக...