​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கண்களை கட்டிக் கொண்டு பொருட்களை அடையாளம் காட்டும் மாணவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள், மிட் பிரைன் ஆக்டிவேஷன் என்ற பயிற்சி மூலம் கண்களைக் கட்டிக்கொண்டு பொருட்கள், எண்கள், மனிதர்களை அடையாளம் காட்டி அசத்துகின்றனர். பட்டாங்குளத்தில் இயங்கி வரும் துலிப் பன்னாட்டுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு போதிபிரைன்...

கொரோனா அறிகுறி: திருவண்ணாமலையில் ஒருவர் அனுமதி

சீனாவில் இருந்து அண்மையில் தமிழகம் திரும்பிய நபர் திருவண்ணாமலையில், கொரானா அறிகுறிகளுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்தமாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், நோயாளி தனிவார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். திருவண்ணாமலையை சேர்ந்த 28 வயது நபர் ஒருவர் சீனாவில்...

தெருவில் செல்வோரை விரட்டி சென்று கடிக்கும் தெரு நாய் 

திருவண்ணாமலை அருகே பத்துக்கும் மேற்பட்டோரை தெருநாய் கடித்த நிலையில் பலத்த காயமடைந்த ஐந்து பேருக்கு உள்நோயாளியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செய்யாறு அடுத்த கீழ்புதுப்பாக்கம் கிராமத்தில் உள்ள மாயாண்டிபுரம், அம்மன்கோயில் தெரு வழியாக நடந்து சென்றவர்களையும், இருசக்கர வாகனத்தில் வந்தவர்களையும் தெருநாய் ஒன்று...

ரூ.5 க்கு புடவை, ரூ.1க்கு லுங்கி என்ற அறிவிப்பால் கடை முன் குவிந்த மக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 5 ரூபாய் நாணயத்துக்கு புடவையும் 1 ரூபாய் நாணயத்துக்கு லுங்கியும் விற்பனை செய்யப்படும் என அறிவித்த கடையின் முன் பெருந்திரளான மக்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வந்தவாசி பஜார் சாலையில் சர்கார் சில்க்ஸ் என்ற துணிக் கடை இயங்கி...

அண்ணாமலையார் ஆலய தீப திருவிழாவில் ரூ 2.25 கோடி உண்டியல் வசூல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையாக ரூபாய் 2 கோடியே 25 லட்சம் வசூலாகி உள்ளது. கடந்த 1ம் தேதி துவங்கி 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்....

பாஜக பிரமுகரின் காருக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் அகரகொரக்கோட்டையில் பாஜக பிரமுகரின் காரை மர்ம நபர்கள் தீவைத்து எரித்துள்ளனர். பாஜக பிரமுகரான (பொருளாதார பிரிவு தலைவரான) சாய்பாபாவின் மனைவியான புவனேஸ்வரி, உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடுகிறார். 8ம் தேதி சாய்பாபாவின் செல்போனில் பேசிய நபர் ஒருவர்,...

மலை மீது மகா தீபம்.. லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்..!

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை மலை உச்சியில் 200 கிலோ எடை கொண்ட ராட்சத கொப்பரையில் மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கில் திரண்டிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று விண்ணதிர பக்தி முழக்கமிட்டனர்.  பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும்...

திருவண்ணாமலை செங்கம் அருகே பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

திருவண்ணாமலை செங்கம் அருகே பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுக் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கம் அருகே புதூர் மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைக்கும் இடத்தில், பெண் ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் சடலமாகக் கிடப்பதாக புதுப்பாளையம்...

பாத்திரக் கடைக்காரரை வெட்டி ரூ. 75 ஆயிரம் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாத்திரக் கடைக்காரரை வெட்டி கொள்ளைடித்த ஒருவன் சிக்கினான். ஜமுனாமரத்தூரில் பாத்திரக் கடை நடத்தி வருபவர் ராஜாமுகமது. இவரது நண்பர் திருப்பத்தூரைச் சேர்ந்த கோழி வியாபாரி மணியும் கோழி வியாபாரம் செய்ததில் கிடைத்த 75 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு இருசக்கர...

கயிலாசநாதர் கோவிலில் மாட்டு பொங்கலை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள கயிலாசநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாட்டு பொங்கலை முன்னிட்டு மூலவருக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. வழிபாட்டையொட்டி நந்தி பகவானுக்கு காய்கறி மற்றும் இனிப்பு பலகாரங்களால் மாலைகள் அணிவிக்கப்பட்டது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட...