​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நிர்பயா குற்றவாளிகளுக்கு எப்போது மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு....

நிர்பயா கொலை வழக்கில் நான்கு குற்றவாளிகளின் மரண தண்டனையை நிறுத்தி வைத்துள்ள டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. நால்வரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற புதிய தேதியை நிர்ணயிக்கவும் மத்திய அரசு கோரியுள்ளது. குற்றவாளிகள் மூன்று பேரின்...

இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்கக் கோரிய மனு தள்ளுபடி

இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்கக் கோரி தாக்கலான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. பஞ்சாப், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, உள்ளிட்ட 8 மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருப்பதால் முஸ்லீம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், போன்று இந்துக்களையும் சிறுபான்மை பட்டியலில் சேர்க்க வேண்டும்  என்று...

உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, உச்சநீதிமன்றம், ஜனநாயகத்தை காத்திடும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியிருப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை, முதலமைச்சரைப் போன்று தாமும் வரவேற்பதாக தெரிவித்திருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலை...

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் அரசு ஒன்றும் போஸ்ட் மேன் அல்ல : ரவிசங்கர் பிரசாத்

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் அரசு ஒன்றும் போஸ்ட்மேன் அல்ல என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யான் பானர்ஜி கேள்வி எழுப்பினார்....

அயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை - சன்னி வக்புவாரியம்

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என்று சன்னி வக்பு வாரியம் தெரிவித்துள்ளது. சன்னி வக்பு வாரியத்தில் 8 உறுப்பினர்கள் உள்ள லக்னோவில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில், 7 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின் பேசிய...

சபரிமலை தீர்ப்பு உச்சநீதிமன்றம் விளக்கம்..!

சபரி மலை கோவில் நடை நாளை திறக்கப்படுவதால் பாதுகாப்பு காரணங்களை ஒட்டி, 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் வரவேண்டாம் என கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த நிலையில், பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசின்...

ராகுலுக்கு எதிரான மனு தள்ளுபடி...

ரபேல் விவகாரத்தில், உச்சநீதிமன்றமே பிரதமர் மோடியை திருடன் எனக் கூறிவிட்டதாக கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்திருக்கும் உச்சநீதிமன்றம், வருங்காலத்தில் பேச்சில் கவனம் தேவை என ராகுலுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில்...

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு பலத்த பாதுகாப்பு

அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஐவருக்கும், முன்னெச்செரிக்கை அடிப்படையிலேயே, பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக, அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருக்கின்றனர். அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, D.Y.சந்திரசூட், அசோக் பூஷன், அப்துல்...

அயோத்தி வழக்கில் தீர்ப்பளிக்கும் நீதிபதிகள் உச்சநீதிமன்றத்திற்கு வருகை

நீதிபதிகள் வருகை அயோத்தி வழக்கில் தீர்ப்பளிக்கும் நீதிபதிகள் உச்சநீதிமன்றத்திற்கு வருகை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் நீதிபதிகள் உச்சநீதிமன்றம் வருகை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட நீதிபதிகள் உச்சநீதிமன்றத்திற்கு வருகை அயோத்தி வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல்...