​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தெலங்கானா முதலமைச்சரின் பண்ணை வீட்டில் தலைமைக் காவலர் தற்கொலை

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் பண்ணை வீட்டில், பணியில் இருந்த தலைமைக் காவலர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சித்திபேட் மாவட்டத்தில் உள்ள எர்ரவல்லி பகுதியில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் பண்ணை வீடு அமைந்துள்ளது. அங்கு வெங்கடேஷ்வரலு என்ற தலைமை...

கடன் தொல்லையால், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை

திருவள்ளூர் மாவட்டத்தில் கடன் பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  ஆவடி அடுத்த அன்னனூரில் வசித்து வரும் கூலித்தொழிலாளியான கோவிந்தசாமிக்கு சுப்பம்மாள் என்ற மனைவியும், நாகராஜ், ரவி...

ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு வீரர் தற்கொலை முயற்சி

மகராஷ்டிரா ஆளுநர் மாளிகையில் பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். எஸ்ஆர்பிஎப் எனப்படும் மாநில ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்தவர் தீபக் சவான் என்பவர் மகாராஷ்டிர ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அவுரங்காபாத்தைச் சேர்ந்த இவர் நேற்று பணிக்கு...

குடும்பத்தகராறில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட கர்ப்பிணிப் பெண்

புதுச்சேரி அருகே திருமணமாகி ஆறு மாதமே ஆன நிலையில் 3 மாத கர்ப்பிணி மனைவியும் கணவரும் குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மதகடிப்பட்டில் பழச்சாறு கடை நடத்தி வந்த சிவக்குமாருக்கும் விஜயலட்சுமிக்கும் ஆறு மாதங்களுக்கு...

தீர்ப்பளிக்க சுதந்திரம் இல்லை - நீதிமன்றத்திலேயே நீதிபதி தற்கொலை முயற்சி

தாய்லாந்தில் நீதிபதி ஒருவர் தீர்ப்பளிக்க சுதந்திரம் இல்லை என்று கூறி நீதிமன்றத்திலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். யாலா நீதிமன்றத்தில் பணியாற்றி வருபவர் கனகோர்ன் பியன்சனா (Khanakorn Pianchana). கொலை மற்றும் துப்பாக்கி ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கு ஒன்றை விசாரித்து வந்த நிலையில்...

திருமணமான 6 மாதங்களில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே கர்ப்பிணி பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் மற்றும் சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தண்டலை கிராமத்தை சேர்ந்த சடையன் என்பவருடைய மகள் ஐஸ்வர்யாவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த பாரதி என்னும் கட்டிட தொழிலாளிக்கும்...

ஆதரவற்றோரின் இறுதி சடங்குக்காக அளித்த உதவி தொகை அவரது இறுதிச் சடங்குக்கே பயன்பட்ட சோக நிகழ்வு

தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் ஆதரவற்றோரின் இறுதி சடங்குக்காக கார் ஓட்டுநர் அளித்த உதவி தொகை அவரது இறுதிச் சடங்குக்கே பயன்பட்ட நிகழ்வு சுற்றுவட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுகிழமை ஆதரவற்றோரின் இறுதி சடங்குக்காக கார் ஓட்டுநரான விஜய், தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு 6...

தற்கொலைக்கு முயன்ற கணவன், சாதுர்யமாக மீட்ட போலீசார்..!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மனைவியை சேர்த்து வைக்க கோரி உடலில் நாட்டு வெடிகுண்டு சுற்றியும் பெட்ரோல் ஊற்றியும் தற்கொலைக்கு முயன்ற கணவனை போலீசார் சாதுர்யமாக மீட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன் ஷிப் வட்டத்தில்...

பெண் பொறியாளர் 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

சென்னை அம்பத்தூரில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்த இளம்பெண், பணிக்குச் சேர்ந்த 2-வது நாளிலேயே அந்த நிறுவனம் அமைந்துள்ள 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். திருச்சியைச் சேர்ந்தவர் தனிதா. 24 வயது இளம் பெண்ணான இவர் அம்பத்தூரில்...

காரணமின்றி பெற்றோர் அடித்ததால் 8 வயது சிறுவன் விபரீத முடிவு

உக்ரைன் நாட்டில் தினசரி பெற்றோரிடம் அடிவாங்கிய 8 வயது சிறுவன் 9 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். தலைநகர் கிவ் நகரத்தில் உள்ள ஆன்டன் என்ற அந்தச் சிறுவனை, அவனது பெற்றோர் காரணமின்றி அடிக்கடி அடித்து வந்ததாக...