​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருமணமான இளம் பெண் மர்ம மரணம், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

சேலம் அருகே திருமணமான இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் அய்யந்திருமாளிகை பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்வருக்கும், அன்னதானப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம்...

போராட்டத்தை வியாபாரமாக செய்யும் அமைப்புகளால் வழி தவறக்கூடாது - ஏ.கே.விஸ்வநாதன்

போராட்டத்தை வியாபாரமாக செய்யும் அமைப்புகளால் மாணவர்கள் வழி தவறி விடக் கூடாது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தியுள்ளார். மாநகரப் பேருந்தில் பட்டாக் கத்தியுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் அட்டகாசம் செய்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது...

திருமங்கலம் அருகே துணைக்கோள் நகரத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே துணைக்கோள் நகரத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருமங்கலத்தை அடுத்த தோப்பூரில் அமைய உள்ள துணைக்கோள் நகரில்,  பல்வேறு வசதிகளுடன் 10 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. இதற்காக...

முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு வந்த மாணவர்களிடம் தடையில்லா சான்று கோரியதால் மாணவர்களும், பெற்றோரும் போராட்டம்

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்  முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு வந்த மாணவர்களிடம் தடையில்லா சான்று கோரியதால் மாணவர்களும் பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேறு பல்கலைக்கழகங்களில் இளங்கலை படித்தவர்கள், அங்கு தடையில்லா சான்றிதழ் பெற்று வந்தால் மட்டுமே சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து...

திண்டிவனம் அருகே தரக்குறைவாக தார்சாலை அமைப்பதாக கூறி பொதுமக்கள் ஒப்பந்ததாரரை முற்றுகையிட்டுப் போராட்டம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தார்சாலை அமைக்கும் பணியில் குறைபாடுகள் இருப்பதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒப்பந்ததாரரை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொல்லியங்குணம் - நல்லாமூர் இடையே அமைக்கப்படும் தார்சாலைப் பணி தரமற்ற முறையில் மேற்கொள்ளப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் ஒப்பந்ததாரரை...

அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தராத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கிராம மக்கள் போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தராத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் பெரும்பட்டு கிராமத்தில் முறையான குடிநீர், கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட வசதிகள் இல்லை...

கொல்கத்தாவில் வங்கதேச துணை தூதரகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்

கொல்கத்தாவில் உள்ள வங்கதேச தூதரகம் முன்பு மாணவர்கள் போராட்டம் நடத்தியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வங்கதேச தலைநகர் டாக்காவில் சாலை பாதுகாப்பை மேம்படுத்த வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மோதல் மூண்டது. இதில் மாணவர்கள் 25 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து ஜாதவ்பூர்...

வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டத்தை கைவிட பிரதமர் ஷேக் ஹசீனா அறிவுறுத்தல்

வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டம் 8-வது நாளை எட்டியுள்ள நிலையில், போராட்டத்தை கைவிடுமாறு பிரதமர் ஷேக் ஹசீனா கேட்டுக் கொண்டுள்ளார். அந்நாட்டின் தலைநகர் டாக்காவில் மாணவர்கள் இருவர் பேருந்து மோதி பலியாகினர். இதனால் ஆவேசமுற்ற பள்ளி மாணவர்கள், விபத்துக்கள் அடிக்கடி நேரிடுவதாகவும், வங்கதேசத்தில் சாலை...

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கோரி தெலுங்கு தேச எம்பிக்கள் போராட்டம்

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தெலுங்கு தேச கட்சியின் எம்பி நாரமல்லி சிவபிரசாத்  (Naramalli Sivaprasad)...

புதிய வேலைவாய்ப்பு சட்ட வரைவை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை

சிலி நாட்டில் புதிய வேலைவாய்ப்பு சட்ட வரைவை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. 18 முதல் 28 வயது வரையுள்ள மாணவர்கள் குறைந்தது 6 மாதங்களுக்கு வாரத்திற்கு 30 மணி நேரம் ஏதாவது பணியில் இருக்கவேண்டும் என்று அந்நாட்டு அரசு...