​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திருவொற்றியூரில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த 26 லாரிகள் பறிமுதல்

சென்னை, திருவொற்றியூரில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த தனியார் நிறுவன மேலாளர், லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்ட 30 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவொற்றியூர், விம்கோ நகரில் விக்டோரியா எஸ்டெட் என்ற நிறுவனம், தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தை ஒப்பந்த...

புழல் சிறையில் இருந்து 20 டி.விக்கள், 40 ரேடியோக்கள், 4 மிக்ஸிக்கள் பறிமுதல் என தகவல்

புழல் சிறையில் உயர்பாதுகாப்பு கைதிகள் பிரிவில் நீடித்துவரும் சோதனையில் தற்போது மேலும் பல பொருட்கள் சிக்கியுள்ளன.  குண்டுவெடிப்பு, கள்ளத்துப்பாக்கி கடத்தல், மதத்தலைவர்கள் கொலை வழக்கில் கைதானவர்கள் உள்பட புழல் சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வது அங்கு...

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல்

துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. துபாயில் இருந்து வந்த மொஹம்மத் இர்ஷாத் என்ற பயணியின் உடைமைகளை சோதனையிட்ட போது அவர் மூன்றரை கிலோவுக்கும் அதிகமான தங்க...

கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வீட்டில் நடைபெற்று வரும் சோதனையில் ரூ.35 லட்சம் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தகவல்

லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் வீட்டில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 35 லட்சம் ரூபாய் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளராக உள்ள பாபு...

வீட்டில் புதைக்கப்பட்டிருந்த 780 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 780 லிட்டர் எரி சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.  வெங்கட்ராயன்பேட்டை, புளியரம்பாக்கம், காழியூர், அத்தி உள்ளிட்ட கிராமங்களில் பாக்கெட்டுகளில் எரிசாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, காழியூர் கிராமத்தில் படவேட்டான்...

திட்டக்குடி அருகே மணல் கடத்திய 5 லாரிகள் பறிமுதல்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மணல் கடத்திய 5 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விருத்தாசலம் சேலம் நெடுஞ்சாலையில் மணல் ஏற்றி வந்த லாரிகளை மறித்து சிறுபாக்கம் போலீசார் சோதனை செய்தனர். உரிய அனுமதியின்றி லாரிகளில் மணல் கடத்தி செல்வது தெரிய வந்ததை...

இராமேஸ்வரத்தில் ஒன்றரை லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் மளிகைக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒன்றரை லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இராமேஸ்வரம் என்.எஸ்.கே.வீதியில் உள்ள முத்துமாரியம்மன் மளிகைகடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடையில் ஆய்வு...

கேரளாவுக்கு இறைச்சிக்காக கடத்திச் செல்லப்பட்ட 74 எருமை மாடுகள் பறிமுதல்

ஆந்திர மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு இறைச்சிக்காக கடத்திச் செல்லப்பட்ட 74 எருமை மாடுகளை சேலம் அருகே விலங்குகள் வதை தடுப்பு அமைப்பினர் பறிமுதல் செய்தனர். சேலம் வழியாக லாரிகளில் கேரளாவுக்கு எருமை மாடுகள் கடத்தப்படுவதாக விலங்குகள் வதை தடுப்பு அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது....

ரூ.5 கோடி மதிப்புடைய ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல்

ஹரியானா மாநிலம் குருகிராமில் போதைப் பொருள் கடத்த முயன்ற இரண்டு நைஜீரிய நாட்டவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புடைய ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் அவர்கள் இருவரும் ஒத்துழைக்க மறுப்பதாக போலீசார் தெரிவித்தனர்....

சென்னையில் இரண்டேகால் கிலோ கஞ்சா, 464 மது பாட்டில்கள் பறிமுதல் - 4 பேர் கைது

சென்னை புரசைவாக்கம் மற்றும் புளியந்தோப்பில் இரண்டேகால் கிலோ கஞ்சா மற்றும் 464 மது பாட்டில்கள் வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். கஞ்சாவிற்பனை செய்ததாக புரசைவாக்கத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்ற நபரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சீனிவாசன் அளித்த தகவலின்...