​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகம் முழுவதும் குழு அமைத்து ஸ்கேன் சென்டர்கள் கண்காணிப்பு - விஜயபாஸ்கர்

தமிழகம் முழுவதும் குழு அமைத்து ஸ்கேன் சென்டர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கூறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், 1 கோடியே...

தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் வெளியிடப்படும் - எஸ்.பி. வேலுமணி

திமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை வெங்கிட்டாபுரத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் கூட்டத்தில் பேசிய அவர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்மீது தி.மு.க. திட்டமிட்டு ஊழல் புகார்களை சுமத்தி வருவதாக குற்றம் சாட்டினார்.  ...

BSNL முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் மீது சென்னை CBI நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு

பிஎஸ்என்எல் சட்டவிரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த காலத்தில், அதிவேக பிராட்பேன்ட் இணைப்புகளை சட்ட விரோதமாக சன் தொலைக்காட்சிக்கு...

இந்திய அணி மீது பிசிசிஐ நிர்வாகக் குழு அதிருப்தி எனத் தகவல்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் செயல்பாட்டால் பிசிசிஐ நிர்வாகக் குழு அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு டெஸ்ட் போட்டிகளிலும் மிக மோசமாக இந்தியா தோல்வியுற்று இருப்பதாக உச்சநீதிமன்றம் அமைத்த பிசிசிஐ நிர்வாகக் குழு கவலை தெரிவித்துள்ளதாகக்...

இலவச கலர் டிவி விநியோக ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் மூவரை விடுதலை செய்தது செல்லும் - உயர்நீதிமன்றம்

இலவச கலர் டிவி விநியோகத்தில் ஊழல் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்ட மூவரை விடுதலை செய்த உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1991-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்குவதற்காக, இலவச கலர் டிவி வாங்க...

கிரண்பேடிக்கு புதுவை முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம்

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து தேவையில்லை என்று துணைநிலை ஆளுநர் கூறியிருப்பதற்கு முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். காரைக்காலில் பேசிய அவர், மாநிலத்தின் நிர்வாகியாக அல்லாமல் பாஜக மாநில தலைவர் போல் கிரண்பேடி செயல்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ...

கிரண்பேடியை திரும்பப்பெற மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில் மத்திய, புதுச்சேரி அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி துணைநிலை ஆளுனர் கிரண்பேடியை திரும்பப்பெற மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில் மத்திய மற்றும் புதுச்சேரி அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கை, பசுமைத் தீர்ப்பாய வழக்கு, அதிகாரிகள் மாற்றம் உள்ளிட்டவற்றில் தலையிட்டு அரசியலமைப்பு விதிகளையும், பதவிப்பிரமாண விதிகளையும்...

ராஜீவ் காந்தி குறித்து அவதூறு பரப்புவதாக தயாரிப்பு நிறுவனம், நடிகர் நவாசுதீன் சித்திக் மீது காங். வழக்கு

ராஜீவ் காந்தியை குறித்த அவதூறு பரப்புவதாக நெட்பிளிக்ஸ் படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் நவாசுதீன் சித்திக் மீது காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கோழை என்றும் போபர்ஸ் ஊழலில் பங்குடையவர் என்றும் sacred games ...

ஊழல் குற்றச்சாட்டில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது

ஊழல் தொடர்பான குற்றச்சாட்டில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது செய்யப்பட்டுள்ளார்.  மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது ஏராளமான ஊழல் புகார்கள் எழுந்ததால், கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்து பதவியிழந்தார். தொடர்ந்து 60 ஆண்டுகளாக ஆட்சி...

கள்ளக்காதலைக் கண்டித்த அக்கா - அக்காவின் கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

சென்னையில் தவறான தொடர்பை கண்டித்த அக்காள் மற்றும் அவரது கணவரை பெண் ஒருவர் மெல்லக்கொல்லும் விஷம் வைத்துக் கொன்ற வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. மயிலாப்பூர் சித்திரைக்குளம் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் - மீனாட்சி தம்பதி பூக்கடை நடத்தி வந்தனர். மீனாட்சியின் தங்கை மைதிலிக்கு...