​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பெண் பயணியிடம் ரூ. 32,000 திருடிய இரண்டு இளம்பெண்களை விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

பெரம்பலூரில் பெண் பயணியிடம் 32 ஆயிரம் ரூபாயைத் திருடிய ஒரே நபரின் இரண்டு மனைவிகளை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பெரம்பலூர் மாவட்டம் பேரளியைச் சேர்ந்த முருகேஸ்வரி வங்கியில் செலுத்துவதற்காக 32 ஆயிரம் ரூபாயுடன் பேருந்தில் வந்தார். நான்கு ரோடு நிறுத்தத்தில்...

ஏப்.1-க்குப் பதில் ஏப்.2 வங்கிகளுக்கான பொது விடுமுறை தினம் : தமிழக அரசு அறிவிப்பு

ரிசர்வ் வங்கியின் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பதிலாக ஏப்ரல் 2-ஆம் தேதியை வங்கிகளுக்கான பொது விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வங்கிகளின்  வருடாந்திர கணக்கு நிறைவுப் பணிகள் ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெறும் நிலையில் அன்றைய தினம் ஞாயிற்றுக்...

பஞ்சாயத்து உத்தரவுப்படி கைகள் கட்டப்பட்ட நிலையில் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட பெண்

உத்தரப்பிரதேசத்தில், பெண் ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில், கண்மூடித்தனமாக தாக்கப் படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மரத்தில் தொங்கும் கயிற்றில், கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் நிற்கும் அந்தப் பெண்ணை, இளைஞர் ஒருவர் பிரம்பால் மூர்க்கமாக தாக்குகிறார். அங்கு திரண்டுள்ள கூட்டத்தினர், தாக்குதலைத் தடுக்காமல் ...

வாக்களிக்க பேரம் பேசியதாக எழுந்த புகாரில் பெரு நாட்டின் அதிபர் குசின்ஸ்கி ராஜினாமா

வாக்களிக்க பேரம் பேசியதாக எழுந்த புகாரில் பெரு நாட்டின் அதிபர் பெட்ரோ பப்லோ குசின்ஸ்கி (Pedro Pablo Kuczynski) பதவி விலகினார். குசின்ஸ்கி அமைச்சராக இருந்தபோது அவரது நிறுவனத்திற்கு முறைகேடாக பணிஒப்பந்தம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் அவர்மீது நாடாளுமன்றத்தில்...

பச்சை நிறத்தில் பாயும் காவிரி ஆற்று தண்ணீர் - விவசாயிகள், பொதுமக்கள் அதிர்ச்சி

கரூர் மாவட்டத்தில் பாயும் காவிரி ஆற்றில் பச்சை நிறத்தில் தண்ணீர் வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஈரோடு, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சாயப்பட்டறைகள் மற்றும் தோல் தொழிற்சாலைகளிலிருந்து திறந்து விடப்படும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் ஆற்றில் திறந்துவிடப்படுவதால் நிற மாற்றம்...

குரங்கணி மலையில் காட்டுத்தீ பிடித்தது குறித்துப் பொதுமக்களிடமும் பாதிக்கப்பட்டவர்களிடமும் விசாரிக்கத் திட்டம் - தமிழக வருவாய்த்துறைச் செயலர்

குரங்கணி மலையில் காட்டுத்தீ பிடித்தது குறித்துப் பொதுமக்களிடமும் பாதிக்கப்பட்டவர்களிடமும் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தமிழக வருவாய்த் துறைச் செயலர் அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் குரங்கணி மலையில் காட்டுத் தீயில் சிக்கி 17பேர் உயிரிழந்தனர். இது குறித்து விசாரிப்பதற்காக வருவாய்த்துறைச் செயலர்...

ஆசிரியர்களின் பாலியல் தொல்லையால் தமது 15 வயது மகள் தற்கொலை செய்துகொண்டதாக தந்தை ஒருவர் குற்றச்சாட்டு

டெல்லியில் ஆசிரியர்களின் பாலியல் தொல்லையால் தமது 15 வயது மகள் தற்கொலை செய்துகொண்டதாக தந்தை ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். மயூர் விஹாரில் உள்ள ஆல்கான் ((Ahlcon))பப்ளிக் பள்ளியில் பயிலும் மாணவி சமூக அறிவியல் பாடம் எடுக்கும் இரண்டு ஆசிரியர்கள் தம்மிடம் தவறாக நடந்து...

காவிரி ஆற்றில் கலக்கும் கழிவுகள் காரணமாக ஆங்காங்கே மீன்கள் செத்து மிதப்பதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை

ஈரோடு அருகே காவிரி ஆற்றில் கலக்கும் கழிவுகள் காரணமாக ஆங்காங்கே மீன்கள் செத்து மிதப்பதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக மட்டும் விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. குறைந்த அளவு...

எம்.பி.க்கள் அமளியால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது - அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளி செய்வதால் மக்களின் வரிப்பணம் வீணாவதாக அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி, சின்னசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.சி. பழனிசாமி, அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க வேண்டும் என்பதே ஓ.பன்னீர்செல்வம்...

திருப்பூரில் நைஜீரியர்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

திருப்பூரில் குடிபோதையில்  வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய  நைஜீரியர்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெத்திசெட்டிபுரம் பகுதியில்  பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் நைஜீரியர்கள், கணவருடன் சென்ற கர்ப்பிணிப் பெண் மீது இருசக்கர வாகனத்தை மோதியுள்ளனர். இதில் நிலைதடுமாறிய கீழே விழுந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர்...