​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்தியர்கள் ஒவ்வொருவரும் அவர்களது தாய்மொழியுடன் பிற மாநில மொழிகளையும் பயில வேண்டும் : குடியரசுத் தலைவர்

இந்தியர்கள் ஒவ்வொருவரும் அவர்களது தாய்மொழியுடன், மற்றொரு பிராந்திய மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் இந்தி பிரச்சார சபாவின் நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், மக்களை இணைப்பதில் மொழியின் பங்கு...

சட்டவிரோத போதை மருந்து தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் சேர்த்தது அமெரிக்கா

21 சட்டவிரோத போதை மருந்து தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் அமெரிக்கா சேர்த்துள்ளது. இந்தப் பட்டியலில் பஹாமாஸ் ((Bahamas)), பெலிஸ் ((Belize)), பொலிவியா ((Bolivia)), கொலம்பியா ((Colombia)), கோஸ்டாரிகா ((Costa Rica)), டொமினிகன் குடியரசு ((Dominican Republic)), ஈக்வடார் ((Ecuador))),...

மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் - அமைச்சர் ஜெயக்குமார்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும், தமிழக மக்களின் எண்ணங்களை புரிந்துகொண்டு, ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 20ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா...

பொதுமக்கள் புகாரை ஏற்று, செய்யாற்றில் உள்ள டாஸ்மாக் கடையை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில், டாஸ்மாக் கடையால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறிய பொதுமக்களின் புகாரை கேட்ட மாவட்ட ஆட்சியர், அந்த கடையை உடனடியாக மூட உத்தரவிட்டார். செய்யாறில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமை ஆய்வு செய்த ஆட்சியர் கந்தசாமி, திருவத்திபுரம் பேருந்து நிலையத்தில்...

கருணாநிதியின் வீட்டிற்கு சென்று முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அஞ்சலி

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் வீட்டிற்கு சென்று குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி அஞ்சலி செலுத்தினார். சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்திற்கு பிரணாப் முகர்ஜி சென்றார். அங்கு அவரை திமுக தலைவர்...

கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை கையாள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை கையாள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான 5 நாள் சிறப்பு பயிற்சி முகாம் சென்னை எழும்பூரில் நடைபெற்றுவருகிறது. தமிழக மாணவர்களில் 100-ல் 15 பேருக்கு கற்றல் குறைபாடு இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து மெட்ராஸ் டிஸ்லெக்சியா...

நகரங்களில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு குறைந்து வருகிறது

நகரங்களில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்து விட்டதாக புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது. AT கியர்னே ((kearney)) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், 1994ஆம் ஆண்டில் நகரப் பொதுப் போக்குவரத்தை நாடும் மக்களின் எண்ணிக்கை 60 முதல் 80 சதவீதமாக...

முக்கொம்பு அணையில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் ஆய்வு

திருச்சி முக்கொம்பு அணையில் நடைபெறும், சீரமைப்பு பணிகளை, பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் பிரபாகர் பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.  திருச்சி முக்கொம்புவில் உள்ள கொள்ளிடம் ஆற்று அணை 182 வருடங்கள் பழமையானது. அண்மையில், மேட்டூர், பவானி சாகர், அமராவதி ஆகிய அணைகளிலிருந்து திறக்கப்பட்ட...

168 ஆண்டுகள் பழமையான மாதா சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கன்னியாகுமரியிலுள்ள 168 ஆண்டுகள் பழமையான நட்சத்திர மாதா சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் பகுதியில் அமைந்துள்ள இந்த சிலையை வணங்கிய பின்னரே மீனவர்கள் கடலுக்குச் செல்வது வழக்கம். காலை இந்த...

ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள் - கழிவு நீர் கலப்பதை தடுக்கக் பொதுமக்கள் கோரிக்கை

சென்னை பெருங்குடி அருகே ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால், கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்லுக்குட்டை பாரதிநகர் பகுதியில் உள்ள ஏரி 10 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் நீர் நிரம்பினால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி...