​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிப்பு : நிதின் கட்காரி

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் பேசிய அவர்,மகாராஷ்டிராவில் பெட்ரோல் விலை லிட்டர் 90 ரூபாயை தாண்டி விட்டதாக குறிப்பிட்டார்....

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து தமிழிசையிடம் கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக அடித்து உதைத்த பாஜகவினர்

சென்னையில் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்த போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநரை, பாஜகவினர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.  சென்னை சைதாப்பேட்டையில் விநாயகர் குறித்த தெருக்கூத்து நிகழ்ச்சியை பார்வையிட்ட  தமிழிசை சவுந்திரராஜன், பின்னர் செய்தியாளர்களைச்...

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் - தர்மேந்திரபிரதான்

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தி இருக்கிறார். டெல்லியில் பேசிய அவர், ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய அரசை விட, மாநில அரசுகளுக்கே அதிக அதிகாரம் இருப்பதாக குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் ஜிஎஸ்டி...

மகாராஷ்டிரத்தில் பெட்ரோல் விலை 90ரூபாயைத் தாண்டியது

மகாராஷ்டிர மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்குத் தொண்ணூறு ரூபாயைத் தாண்டியுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே வருகிறது. இன்றைய நிலவரப்படி  மகாராஷ்டிரத்தின் 11மாநகரங்களில் பெட்ரோல் விலை தொண்ணூறு ரூபாயைத் தாண்டியுள்ளது....

பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் - ஈஸ்வரன்

ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க, தமிழக அரசை கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருவதால் மக்கள் அன்றாடம்...

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு

பெட்ரோல், டீசல் விலை இன்றும் சிறிதளவு உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தை நிலவரம், ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட சரிவு காரணமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 16 காசுகள் உயர்ந்து 85...

மத்திய அரசின் தவறான கொள்கையே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணம் - தம்பிதுரை

மத்திய அரசின் தவறான கொள்கையே பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்குக் காரணம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். திண்டுக்கல் மாரம்பாட புனித அந்தோணியார் ஆலயத்தில் பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் மக்களவைதுணை சபாநாயகர் தம்பிதுரை, சட்டமன்ற உறுப்பினர்...

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு குறித்த கருத்துக்கு மத்திய அமைச்சர் மன்னிப்பு

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு குறித்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு கிளம்பியதால், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மன்னிப்பு கோரியுள்ளார். தாம் மத்திய அமைச்சராக இருப்பதால், பல்வேறு சலுகைகள் கிடைப்பதாகவும், அதனால், பெட்ரோல் டீசல் விலை உயர்வு தம்மை பாதிக்கவில்லை...

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு

பெட்ரோல், டீசல் விலை இன்றும்  உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தை நிலவரம், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகிய காரணங்களால் பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று 36 காசுகள் உயர்ந்து 84 ரூபாய் 85...

பிரதமர் மோடி தலைமையில் இன்று பொருளாதார ஆய்வுக் கூட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க,  பிரதமர் மோடி தலைமையில் இன்று பொருளாதார ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை , பெட்ரோல் டீசல் விலை உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு,...