​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உய்கர் இன மக்கள் தொடர்பாக அமெரிக்கத் தீர்மானத்திற்கு சீன அரசு கண்டனம்

சீனாவில், உய்கர்(Uygur)இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வலியுறுத்தியும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்தும், அமெரிக்கா, தனது நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் இயற்றியுள்ளது. இதற்கு சீனா கடும் ஆட்சேபம் தெரிவித்திருப்பதோடு, பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்திருக்கிறது. சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணங்களில்...

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக குடியேறிய இந்துகள், பெளத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை அளிக்க ஏதுவாக உருவாக்கப்பட்ட சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை...

மகளிருக்கு எதிராக வன்முறையை தடுக்க கடும் நடவடிக்கை வேண்டும்

பாலியல் பலாத்கார சம்பவங்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர், நாட்டில் பெண்கள் தெய்வங்களாக வழிபடப்படுகிறார்கள் என்றார். தாயை தெய்வம் என்று பேணிக் காப்பது நம் கலாசாரம் என்ற அவர், தினம் தினம்...

10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ரயில்வேயின் இயக்க விகிதம் மோசமாக இருந்ததாக சிஏஜி அறிக்கை

2017-18ம் ஆண்டில் ரயில்வேயின் இயக்க விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமாக இருந்ததாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிஏஜி எனப்படும் தலைமைத கணக்கு தணிக்கை அமைப்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், வருவாய்க்கு எதிரான செலவினங்களில் ரயில்வே திறம்பட செயல்படவில்லை...

முப்படை தளபதி பதவிக்கான பொறுப்புகள், பணிகளுக்கான இறுதி வடிவம்

முப்படை தளபதி பதவிக்கான பொறுப்புகளையும், பணிகளையும் இறுதி செய்வதற்காக நியமிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான உயர்நிலைக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இதுதொடர்பாக மாநிலங்களவையில் பேசிய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக்,முப்படை தளபதி பதவி...

பெண் மருத்துவரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் அடித்துக் கொல்ல வேண்டும் - நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்

ஹைதராபாத் அருகே பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்ற கொலையாளிகளுக்கு தூக்குதண்டனை விதிக்க வேண்டும் என்றும், அடித்துக் கொல்ல வேண்டும் எனவும், ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய...

அரசியல் அமைப்பு நமக்கெல்லாம் வழிகாட்டும் ஒளிவிளக்கு போன்றது - பிரதமர் மோடி

நாட்டின் அரசியல் அமைப்பு சாசனம் எனும் புனித நூல் நமக்கெல்லாம் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்வதாக, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருக்கிறார். இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி...

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கடும் அமளி - 2 எம்.பிக்கள் சஸ்பெண்ட்

நாடாளுமன்றத்தில் மகாராஷ்ட்ர விவகாரம் தொடர்பாக கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி கடும் அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பிக்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காலையில் மக்களவை கூடிய போது, மகாராஷ்ட்ராவில் பாஜக முறைகேடாக ஆட்சி அமைத்ததாக கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர். “ஜனநாயகத்தை...

வாடகைத்தாய் கட்டுப்பாடு மசோதா குறித்து ஆய்வு செய்ய குழு

வாடகைத்தாய் கட்டுப்பாடு மசோதா குறித்து ஆய்வு செய்திட 23 பேர் அடங்கிய தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில், இப்பிரச்சினை குறித்து பேசிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையை ஏற்றுக்...

வளைகுடா நாடுகளில் 5 ஆண்டுகளில் 34,000 இந்தியர்கள் உயிரிழப்பு

வளைகுடா நாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 34 ஆயிரம் இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியுறவுத்துறை அதிர்ச்சி புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகளில் நாள்தோறும் சராசரியாக 15 இந்தியர்கள் உயிரிழப்புதாகவும்...