​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இங்கிலாந்து நாடாளுமன்ற முடக்கத்தை எதிர்த்த வழக்கு மீது விசாரணை தொடக்கம்

இங்கிலாந்து நாடாளுமன்றத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் முடக்கி வைத்திருப்பதை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்கு மீது அந்நாட்டு உச்சநீதிமன்றம் விசாரணையை தொடங்கியுள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற போரிஸ் ஜான்சன் மேற்கொண்ட முயற்சிக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை...

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்கிறது சிஏஜி

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை மத்திய கணக்குத் தணிக்கைக் குழுவான சிஏஜி வரும் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. ரபேல் விமானங்கள் கொள்முதல் பேரத்தில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் பாஜக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளன. இதையடுத்து மத்திய...

புதிய மோட்டார் வாகன சட்டம் - நீதிமன்றத்தில் வசூலிக்கப்படும் அபராத தொகை

மோட்டார் வாகன சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், உயர்த்தப்பட்ட அபராத தொகை நீதிமன்றத்தில் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த நாடாளுமன்றத் தொடரின்போது, மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத்...

நாடாளுமன்றத்துக்குள் குழந்தையுடன் வந்த பெண் எம்.பியை வெளியேற்றிய சபாநாயகர்

கென்யாவில், நாடாளுமன்ற அவைக்குள் குழந்தையுடன் சென்ற பெண் எம்.பி அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். கென்யாவில் நாடாளுமன்றம் புதன்கிழமை கூடிய நிலையில், அதில் உறுப்பினராக இருக்கும் ஸூலேகா ஹாசன் என்பவர், தவிர்க்க முடியாத சூழ்நிலையால் தனது கைக்குழந்தையை அழைத்துக்கொண்டு நாடாளுமன்றம் சென்றார். ஆனால் அவைக்குள் சென்ற அவரை...

காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து - வண்ண விளக்குகளில் மின்னிய நாடாளுமன்றக் கட்டடம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. மத்திய அரசின் மிகப் பெரிய சாதனையாகக் கூறப்படும்...

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் - அமித் ஷா

இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது காஷ்மீரில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் வழக்கத்தை விட காஷ்மீரில் துணை ராணுவப்படை குவிப்பு ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது காஷ்மீர் விவகாரம் தொடர்பான எதிர்கட்சிகளின் நோட்டீஸ் கவனத்தில்...

1952ம் ஆண்டுக்குப் பின் நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய சாதனை..!

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்களவையில் மட்டும் இதுவரை 30 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு 17வது மக்களவையின் அலுவல்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. 1952ம் ஆண்டுக்குப் பின் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய சாதனையாக இது கருதப்படுகிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்திருத்த மசோதா, முத்தலாக் தடை மசோதா,...

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு பின் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர்கள், மாநில தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய...

அரசு குடியிருப்புகளில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை விரைந்து வெளியேற்ற நடவடிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கான அரசு குடியிருப்புகளில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை விரைவாக வெளியேற்றுவது தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேறியது. மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளித்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, பல எம்.பி.க்கள் தங்களுக்கான...

தபால் துறை தேர்வு செப்.15ல் நடைபெறும் என அறிவிப்பு

கடந்த 14ஆம் தேதி நடைபெற்று ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு, செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தபால் துறையில் பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வு கடந்த 14ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக...