​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாளை தூத்துக்குடி செல்கிறார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

தூத்துக்குடியில் அமைதி திரும்பியதை அடுத்து, நாளை அங்கு செல்லும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் அமைதி நிலை திரும்பியதை அடுத்து, அங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு இன்று காலை 8 மணியுடன்...

வரைவுத் திட்டத்தை ஆராய்ந்து உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை அளிக்கும் - ஓ.பி.எஸ்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவுத் திட்டத்தையும் மாநில அரசுகளின் வாதங்களையும் ஆராய்ந்து உச்சநீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கும் என நம்புவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு...

அதிமுக கட்சியும், ஆட்சியும் வண்டியின் இரண்டு சக்கரங்கள் போல் செயல்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

அதிமுக கட்சியும், ஆட்சியும் வண்டியின் இரண்டு சக்கரங்கள் போல் செயல்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்...

முதலமைச்சரை சந்திக்க நேரம் ஒதுக்க முடியாது என பிரதமர் மோடி கூறவில்லை - ஓ.பன்னீர்செல்வம்

காவிரி விவகாரம் குறித்து முதலமைச்சரை சந்திக்க நேரம் ஒதுக்க முடியாது என்று பிரதமர் மோடி கூறவில்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் மே தின பொதுக்கூட்டத்தில் பேசியபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி விவகாரம் குறித்து முதலில் நீர்வளத்துறை அமைச்சரை...

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை டெல்லி செல்கிறார்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று  மாலை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். பதினைந்தாவது நிதிக்குழுவின் பரிந்துரையில் இடம்பெற்றுள்ள தமிழகத்திற்கு பாதகமான அம்சங்களைத் திருத்த மத்திய அரசிடம் வலியுறுத்துவது என கடந்த 10 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்...

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்தநாள் விழா - முதலமைச்சர், திமுக செயல் தலைவர் மரியாதை

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அம்பேத்கர் சிலைக்கு அருகே, அவரது புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்...

அதிமுகவின் புகழைத் தினகரன் பயன்படுத்த முயல்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் குற்றச்சாட்டு

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தினகரன், அதிமுகவின் புகழை நேர்மையற்ற வகையில் பயன்படுத்த முயல்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி, அதற்குக்...

காவிரி விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக திமுக போராடுகிறது: OPS

காவிரி விவகாரத்தில், வெறும் அரசியல் லாபத்திற்காகவே, திமுக, போராட்டங்களை முன்னெடுப்பதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். சென்னையை அடுத்த  கிளம்பாக்கத்தில், 321 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புறநகர் பேருந்து நிலையம் அமையவிருக்கிறது. இங்கு வியாழக்கிழமை மாலை  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,  கட்டுமான பணிகள்...

அதிமுக-வின் உண்ணாவிரதப் போராட்டம் டெல்லியின் கவனத்தை ஈர்க்கும் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக சார்பில் நடைபெற உள்ள உண்ணாவிரதப் போராட்டம் டெல்லியின் கவனத்தை ஈர்க்கும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை மாதவரம் அருகே 8ஏக்கர் நிலப்பரப்பில் 95கோடி ரூபாய் செலவில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கென கட்டப்பட்டு வரும் புறநகர் பேருந்துநிலையத்தை...

சூலூர் சாலை விரிவாக்கம் குறித்து உடனே ஆவண செய்யப்படும் - ஓ.பன்னீர்செல்வம்

கோவை மாவட்டம் சூலூர் சாலை விரிவாக்கம் குறித்து உடனே ஆவண செய்யப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  கோவை விழா முடிந்து சாலை மார்க்கமாக தேனிக்கு புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் சூலூரில் திரண்டிருந்த அதிமுகவினரின் வரவேற்பினை ஏற்றுக் கொண்டார். அப்போது அவரிடம் சூலூர்...