​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டெல்லியில் ஓ.பன்னீர் செல்வத்தை நிர்மலா சீதாராமன் சந்திக்கவில்லை - பாதுகாப்புத்துறை அமைச்சகம் திட்டவட்டம்

டெல்லி வந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக வெளியான தகவலை அவரது அலுவலகம் மறுத்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவிக்கவே துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளதாக, சென்னை வண்டலூரில் செய்தியாளர்களின் கேள்விக்கு...

2018-19ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் 3 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் - ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டுக்கு உள்ள கடன்சுமை பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், நிதித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது திமுக உறுப்பினர் கே.என்.நேரு தமிழகஅரசின் கடன் சுமை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார். அப்போது துணை முதல்வர்...

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித் தொகை மாநில அரசின் நிதி ஆதாரத்தை கொண்டே வழங்கப்படும் - ஓ.பன்னீர்செல்வம்

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித் தொகை மாநில அரசின் நிதி ஆதாரத்தை கொண்டே வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், இது தொடர்பான மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி மாநில அரசின் பங்கு 1526...

துணை முதலமைச்சர் OPS-ஐ மனதில் வைத்து துரைமுருகனின் கேள்வியால் சட்டபேரவையில் சிரிப்பலை

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை மனதில் வைத்து தி.மு.கவின் துரைமுருகன் எழுப்பிய கேள்வியால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது. கடந்த முறை வெளியிடப்பட்ட காவல்துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது...

மானிய விலை ஸ்கூட்டர் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார் ஓ.பன்னீர்செல்வம்

தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் நடைபெற்ற விழாவில் மானிய விலை ஸ்கூட்டர் உள்ளிட்ட 7 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். மானிய விலை ஸ்கூட்டர்கள்,  பசுமை வீடுகளுக்கான பணியாணைகள், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்...

எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், ஸ்டாலின், ரஜினிகாந்துக்கு ஜக்கி வாசுதேவ் உடற்பயிற்சி சவால்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு யோகா குருவான ஜக்கி வாசுதேவ் உடற்பயிற்சி குறித்த சவாலை வெளியிட்டுள்ளார். அவர்கள் உடல் நலத்துடன் வாழவும், தமிழகத்தின் ஆரோக்கியத்தைக் கருதியும் தமது சவாலை ஏற்க...

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார் ஓ. பன்னீர் செல்வம்

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து, தேனி மாவட்ட பாசனத்துக்காக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்துவிட்டார். தென்மேற்கு பருவமழை காரணமாக, முல்லைப்பெரியாறு அணையில், இன்று காலை நிலவரப்படி 127.40 அடி தண்ணீர் உள்ளது. மேலும் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக அணையை திறக்குமாறு...

சென்னையை குடிசையற்ற நகராக மாற்றுவதே தமிழக அரசின் நோக்கம் - ஓ.பன்னீர்செல்வம்

சென்னையை குடிசையற்ற மாநகராக மாற்றுவதே தமிழக அரசின் நோக்கம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். குடிசை மாற்று வாரிய வீடுகள் தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டுவந்த எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ ரவிச்சந்திரன், அது தொடர்பாக கேள்வியும் எழுப்பினார். அவருக்கு...

சேதமடைந்த வீடுகளை இடித்துவிட்டு கட்டப்படும் புதிய வீடுகள் அங்கு குடியிருந்தவர்களுக்கே வழங்கப்படும் - ஓ.பன்னீர்செல்வம்

வீட்டு வசதி வாரியம், குடிசைமாற்று வாரியத்திற்கு சொந்தமான சேதமடைந்த வீடுகளை இடித்துவிட்டு கட்டப்படும் புதிய வீடுகள் அங்கு குடியிருந்தவர்களுக்கே வழங்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார். சென்னையில் கொளத்தூர், தாடண்டர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்துள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்பட்டு...

துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு நேரில் சென்று ஓ.பன்னீர்செல்வம் ஆறுதல்

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நிதியுதவியையும் வழங்கினார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள், அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை  சந்திப்பதற்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். 5வது...