​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உதகையில் 2 -வது சீசன் முடிந்த நிலையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் 2 வது சீசன் முடிந்தும் இதமான காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் 2 வது சீசன் காலமான செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கனமழை கொட்டியதால் சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்தது. இந்நிலையில் 2...

மேட்டுப்பாளையம்-உதகை மலை ரயில் 3 நாட்களுக்கு ரத்து

ரயில்பாதை சீரமைப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் மேலும் மூன்று  நாட்களுக்கு  ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை துவங்கியது முதலே மலை ரயில் பாதை அமைந்துள்ள மேட்டுப்பாளையம்,கல்லார் பகுதியில் ...

நீலகிரியில் தொடரும் மண்சரிவு அபாயம்

நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு அந்த மாவட்டத்தில் கனமழை தொடரும் என்பதால் மேலும் 238 இடங்களில் மண் சரியும் அபாயம் உருவாகி உள்ளது. கடந்த ஒரு ஒருவாரமாக நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும்...

உதகை மலை ரயிலின் 111வது ஆண்டு நிறைவு விழா

உதகை மலை ரயிலின் 111வது ஆண்டு நிறைவு விழா பயணிகளுடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து உதகமண்டலம் வரையுள்ள பசுமையும் அழகும் சூழ்ந்த மலைப்பாதையில் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 1908ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம்...

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் வாகனத்தை துரத்திய ஒற்றை யானை

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் புகைப்படம் எடுக்க முயன்றவர்களின் வாகனத்தை ஒற்றை காட்டு யானை துரத்தியது. கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் கடந்த சில தினங்களாக ஒற்றை காட்டுயானை ஒன்று சாலையின் ஒரத்திலுள்ள தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளது....

விடுமுறை நாளான நேற்று சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்

விடுமுறை நாளான நேற்று தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு ஏராளமானோர் குடும்பத்தினருடன் வருகை தந்தனர். படகு சவாரி செய்தும், அருவிகளில் குளித்தும் விடுமுறையைக் கழித்தனர். ஊட்டி ஊட்டியில் இரண்டாவது சீசன் களைக்கட்ட தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.புதிதாக 10...

குந்தா அணை முழு கொள்ளளவை எட்டியது

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டது. தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பைக்காரா, கிளன்மார்கன், முக்கூர்த்தி உள்ளிட்ட 12 அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன. கடந்த 5ம்தேதி...

பைக்காரா அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் 3 மதகுகளிலும் நீர் திறப்பு

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள பைக்காரா அணையின் 3 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பைக்காரா அணையின் நீர்மட்டம்...

வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த துணை முதலமைச்சர்

நீலகிரி மாவட்டம் உதகை சென்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். உதகையிலுள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்....

பில்லூர் அணை இரண்டாவது முறையாக நிரம்பியது

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து நீடிக்கும் கனமழை காரணமாக பில்லூர் அணை இரண்டாவது முறையாக நிரம்பியுள்ளது. கடந்தசில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. உதகை, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மூன்று நாட்களாக மழை நீடித்து வருகிறது.இதனால்...