​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பட்ஜெட் உரையில் இடம் பெற்ற திருக்குறள், ஆத்திச்சூடி

பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆத்திச்சூடி, திருக்குறளை ஆகியவற்றை மேற்கோள் காட்டினார். பட்ஜெட் உரையை வாசித்த அவர், விவசாயத் துறை சார்ந்த திட்டங்களை அறிவிக்கும் போது "பூமி திருத்தி உண்" என்ற ஆத்திச்சூடி பாடலை சுட்டிக்காட்டினார்.பெண் கவிஞரான...

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அச்சேற்றும் பணிகளை ஊழியர்களுக்கு அல்வா வழங்கி துவங்கி வைத்தார் மத்திய நிதியமைச்சர்

மத்திய நிதியமைச்சகத்தில் 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அச்சேற்றும் பணிகளை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊழியர்களுக்கு அல்வா வழங்கி தொடங்கி வைத்தார். வரும் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய...

பிப்ரவரி 1-ம் தேதி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2020 - 2021ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை... நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதையடுத்து, மீண்டும் இயல்புநிலைக்குப் பொருளாதாரத்தைக் கொண்டு வரும் நோக்கில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.  நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நடவடிக்கையை மத்திய...

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் மீது பாகுபாடு காட்டுவதில்லை- அமைச்சர் மறுப்பு

குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக, பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சி பெருங்குழப்பத்தை ஏற்படுத்துவதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியிருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, இல்லங்கள்தோறும் சென்று, துண்டு பிரசுரங்கள் வழங்கி, விழிப்புணர்வு பரப்புரையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

மத்திய அரசுக்கு ரூ.2610 கோடி ஈவுத்தொகை வழங்கியது எல்ஐசி

எல்ஐசி நிறுவனம் 2018 - 2019 ஆம் நிதி ஆண்டுக்கான ஈவுத்தொகையாக 2610 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், எல்ஐசி தலைவர் எம்ஆர்.குமார் அந்த தொகைக்கான காசோலையை வழங்கினார். வரலாற்றிலேயே...

மத்திய பொது பட்ஜெட்.. நிதியமைச்சர்களுடன் ஆலோசனை..!

மத்திய பொது பட்ஜெட் தொடர்பாக, மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழ்நாட்டிற்கு, சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும் என துணை முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.  பொது பட்ஜெட்-2020 குறித்து,...

இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 38வது கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஜிஎஸ்டி வரிகள் வசூல் திடீரென சரிவை சந்தித்ததால் மத்திய அரசுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது. மாநில...

தொழில்துறை பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் குறித்து தொழில்துறை பிரதிநிதிகளுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார். வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளுடன், பட்ஜெட் தயாரிப்புக்கு முந்தைய...

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதையொட்டி, பல்துறை பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் இன்று ஆலோசனை

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதையொட்டி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றுமுதல் ஒருவாரம் ஆலோசனை மேற்கொள்கிறார். ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன் தொழில், விவசாயம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்களுடன் நிதியமைச்சர் ஆலோசனை நடத்துவது வழக்கம்....