​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் பரவலாக மழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் எடப்பாடி, கொங்கணாபுரம், சங்ககிரி, மகுடஞ்சாவடி, செட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூரில்...

குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் நடந்து செல்லும் சிறுத்தைப் புலிகள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வண்டிச்சோலை என்ற இடத்தில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதால்  இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  வன விலங்குகளை வனத்திற்குள் தேடிச் சென்றாலும் காண்பது அரிது. அதிலும் அரிது கருஞ்சிறுத்தைகளைக் காண்பது. கருச்சிறுத்தைகள் பிறக்கும் போதே கருமை...

பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தின் வரவேற்பு மையம் இடமாற்றம்

ஜூன் இரண்டாம் தேதி முதல் பந்திப்பூர் புலிகள் காப்பகம் வரவேற்பு மையம் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. கடந்த 1974ம் ஆண்டு உருவான வனவிலங்கு சரணாலயம் 9 ஆண்டுகளுக்கு முன்பு பந்திப்பூர் புலிகள் காப்பகமாக உருவாக்கப்பட்டது. இதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அதிகரித்து...

குன்னூர் பழக்கண்காட்சியைக் காணக் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறை முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் ஆயிரக்கணக்கானோர் குடும்பங்களுடன் குவிந்திருந்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி நேற்று தொடங்கியது. ஒன்றரை டன் பழங்களைக் கொண்டு 7 அடுக்குகளில் அமைக்கப்பட்ட...

புலிகள் காப்பக வனப்பகுதியில் கிடந்த பெண் புலியின் உடல்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் இருபுலிகள் இடையே ஏற்பட்ட சண்டையில் பெண் புலி உயிரிழந்தது. சிங்கார வனச்சரகம் சீமான் வனப்பகுதியில் மாலை நேரத்தில் வேட்டைக்காரர்களை தடுக்கும் ரோந்துப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, பெண் புலி இறந்து...

பகலில் ஜாலியாக உலா வந்த ஒற்றை கரடி

நீலகிரி மாவட்டம்  மஞ்சூர் அருகே பகல் நேரத்தில்  தேயிலை  தோட்டத்தை சுற்றிவந்த ஒற்றை கரடியால்  பரபரப்பு ஏற்பட்டது. குந்தா உருளைகண்டி பகுதிக்குள் கரடி நுழைந்ததைக் கண்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். தேயிலை தோட்டத்தில்  சுமார் 30 நிமிடம்  சுற்றித்...

குன்னூர் ரயில் நிலையத்தில் இயற்கை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன

நீலகிரி மாவட்டம் குன்னூர் ரயில் நிலையத்தில் இயற்கைக் காட்சிகளுடன் கூடிய வன விலங்குகளின் படம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகை மலை ரயில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர்....

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ருத்ராட்சை சீசன் ஆரம்பம்

நீலகிரி மாவட்டத்தில் தற்போது ருத்ராட்சை சீசன் தொடங்கியுள்ள நிலையில், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள மரங்களில் காய்க்கும் ருத்ராட்சை காய்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் சேகரித்து வருகின்றனர். சிம்ஸ் பூங்காவில் உள்ள ருத்ராட்ச மரங்களில் காய்கள் அதிகளவில் காய்க்க தொடங்கியுள்ளன. பூங்காவிற்கு வரும்...

உதகை வீதிகளில் வலம் வரும் கரடியால் பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் உதகை நகர வீதிகளில் சுற்றித் திரியும் கரடியை பிடிக்க வனத்துறையின முயற்சி மேற்கொண்டுள்ளனர். இங்குள்ள மாரியம்மன் கோவில் வீதியில் சுற்றித் திரிந்த கரடி வீடுகளின் வளாகங்களுக்குள்ளும் புகுந்ததால் மக்கள் வெளியில் வர அஞ்சி கதவுகளை மூடிக்கொண்டு வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்....

ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் பறிமுதல்

தேர்தல் விதிமுறைகளை மீறி ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட 83 லட்சம் ரூபாயை, நீலகிரி மாவட்ட பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.  தேர்தல் விதிமுறைகள் அமுலானதை தொடர்ந்து நீலகிரி மாவட்ட எல்லையில் வாகன சோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆவணங்கள்...