​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

2 கொலை வழக்குகளில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்

2 கொலை வழக்குகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சாமியார் ராம்பாலுக்கு, ஆயுள் தண்டனை விதித்து, ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹரியானா மாநிலம் பர்வாலா என்ற இடத்தில் சாமியார் ராம்பால் ஆசிரமம் நடத்தி வந்தார். கடந்த 2014ஆம் ஆண்டில் நான்கு பெண்கள் மற்றும் ஒரு...

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதி வாக்குமூலத்தில் முரண் - நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான சுவாதியின் வாக்குமூலத்தில் முரண்பாடு உள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாமக்கல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில், நாமக்கல் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்டு 30...

செங்கல் சூளை உரிமையாளர் கொலை வழக்கில் 8 பேர் சரண்

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே வீட்டுக்குள் புகுந்து செங்கல் சூளை உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், பூந்தமல்லி நீதிமன்றத்தில் 8 பேர் சரண் அடைந்தனர். வெள்ளவேடு அருகே மேல்மணம்பேடு பகுதி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த தங்கராஜ் என்பவர், தேர்தல் விரோதம்...

பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் பரசுராம் வாக்மரே கவுரியைத் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்துள்ளது

கர்நாடகத்தில் பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பரசுராம் வாக்மரே தான் அவரைத் துப்பாக்கியால் சுட்டது என தடயவியல் சோதனையில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இதே செப்டம்பர் 5-ம் தேதியில் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து 12...

வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர் கொலை வழக்கில் கூலிப்படையினர் 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

திருவள்ளூர் மாவட்டம் வட சென்னை அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர் கொலை வழக்கில் சரணடைந்த கூலிப்படையினர் 8 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்ததாரராக இருந்த ஜேம்ஸ்பால், கடந்த 13ஆம் தேதி,...

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் 3 பேர் கைது

சென்னையில் பெண் தொடர்பான தகராறில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அயனாவரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொண்டரணி மாநில துணை செயலாளரும் பிரபல ரவுடியுமான ஜோசப் என்கிற ரஞ்சித் குமார்...

நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பெண்கள் கைது

நாமக்கல்லில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வழக்கில் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் அருகே பொட்டிரெட்டிப்பட்டியைச் சேரந்தவர் அமராவதி. கணவரை இழந்த அவர் தனது மகன், மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதியன்று வீட்டில் தனியாக...

புதுச்சேரியில் மூவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளி கைது

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் மூவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியான மணிகண்டனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் 2017அக்டோபர் 19ஆம் நாள் சதீஷ்,  நாய் சேகர், ஜெரால்டு, புளியங்கொட்டை ரங்கராஜ் ஆகியோரை ஒரு கும்பல் வெடிகுண்டுகளை வீசி ஓடஓட விரட்டி வெட்டியது....

புதுக்கோட்டை : மூதாட்டி கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மூதாட்டி கொல்லப்பட்ட வழக்கில் இரு சிறார்கள் உள்பட 3 பேர் பிடிபட்டனர். திருமணஞ்சேரியைச் சேர்ந்த செல்லம்மாள் என்ற மூதாட்டி கடந்த 3ஆம் தேதி நள்ளிரவு கொல்லப்பட்டார். இதுகுறித்து கறம்பகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த...

வேளாண் அலுவலர் கொலை வழக்கில் நான்கு நாள் விசாரணைக்குப் பின் பெண் தட்டச்சர் சிறையிலடைப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வேளாண்மைத்துறை அலுவலர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சவுந்தர்யா என்ற பெண்ணை, 4 நாட்கள் விசாரணைக்குப் பின்னர் போலீசார் சிறையிலடைத்தனர்.  வேளாண்மைத்துறை அலுவலராக பணியாற்றி வந்த பூபதி கண்ணன் என்பவர் கடந்த 27 ஆம் தேதி மாத்தூர் அருகே படுகொலை செய்யப்பட்டார்....