​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வடசென்னையில் 800 மெகாவாட் மின்னுற்பத்தி மார்ச்சில் தொடங்கும் - அமைச்சர் தங்கமணி

வடசென்னையில் 800 மெகாவாட் திறன்கொண்ட அனல் மின் உற்பத்தித் திட்டத்தை முதலமைச்சர் வரும் மார்ச் மாதம் தொடங்கி வைப்பார் என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். காட்பாடியில் மின்வாரிய மண்டலங்களுக்கு இடையேயான மகளிருக்கு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது....

விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டு புதிய அரசாணை வெளியீடு - அமைச்சர் தங்கமணி

விளைநிலங்களில் மின்கோபுரங்கள் அமைப்பது தொடர்பாக விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டு, புதிய அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது என்றும், சிலர் அரசியல் காரணங்களுக்காக போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள் எனவும் அமைச்சர் தங்கமணி கூறினார். ஈரோடு மாவட்டம் பாசூர் பாலத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர்,...

உயர்மின்கோபுர விவகாரத்தில் கம்யூனிஸ்டுகள் இரட்டை வேடம் - அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், அக்கட்சி ஆட்சி செய்யும் கேரளாவில் உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில்  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிருவோருக்கான விருப்ப மனுக்கள் வழங்கிய பிறகு பேசிய அமைச்சர் தங்கமணி,...

அ.தி.மு.கவுக்கு ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தான் தலைவர்கள்

அ.தி.மு.கவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும்தான் தலைவர்கள் என்றும் வேறு யாருக்கும் இடமில்லை என்றும் சசிகலா குறித்த கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதிலளித்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சர் செய்தியாளர்களை சந்திக்கையில்...

அதிமுக வேட்பாளர் சுமார் 30,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் - அமைச்சர் தங்கமணி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணன் சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலையொட்டி அதிமுகவின் தேர்தல் அலுவலகத்தை அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ,...

தமிழகத்தில் புதியதாக 5 லட்சம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்படும்

தமிழகத்தில் புதியதாக 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், முதலமைச்சரின் வெளிநாடு பயணத்தால் 8ஆயிரம் கோடி ரூபாய்...

தமிழகத்தில் தற்போதைக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படாது - அமைச்சர் தங்கமணி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தில் நிதி நெருக்கடி இருந்தாலும், தமிழகத்தில் தற்போதைக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படாது என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நிதி நெருக்கடி இருந்தாலும்...

அரசு மருத்துவமனையில் ரூ.45 லட்சம் மதிப்பில் விரிவுபடுத்தப்பட்ட மகப்பேறு பிரிவு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட்டுள்ள மகப்பேறு பிரிவினை மின் துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், 16 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட்டு மகப்பேறு பிரிவு வார்டு...

அனைத்து டாஸ்மாக் விற்பனை நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் - அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் 5,200 டாஸ்மாக் விற்பனை நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் வைக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் பணியாளர் குடும்பத்துக்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிதியுதவியும்,...

எலக்ட்ரிகா 2019 எனும் தலைப்பில் மின்சாதன பொருட்களுக்கான கண்காட்சி

மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் மின் ஊழியர்கள் சார்பில் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார் சென்னையில் எலக்ட்ரிகா 2019 எனும் தலைப்பில் மின்சாதன பொருட்களுக்கான கண்காட்சியை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில்...