​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மெட்ரோ ரயிலில் பயணித்த தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின்

மெட்ரோ ரயில் திட்டத்திற்காக தி.மு.க எடுத்துக்கொண்ட முயற்சிகளை எண்ணி மகிழ்ச்சியடைவதாக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார். நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் திமுக மேயர் உமாமகேஸ்வரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின்,  மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அங்கிருந்து தேனாம்பேட்டை...

மெட்ரோ பயண அட்டை மூலம் வாகனம் நிறுத்த கட்டணத்தை செலுத்தும் வசதி

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனத்தை நிறுத்த மெட்ரோ ரயில் பயண அட்டை மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டை மூலம் வாகனம் நிறுத்தும் கட்டணங்களை செலுத்தும் முயற்சி நடப்பு ஜூலை மாதத்தில்...

மெட்ரோ ரயில் நிலையங்களில் சூரியசக்தி மின் உற்பத்தி திட்டம் தொடக்கம்

சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் தலைமை வளாகத்தில் 1.2 மெகாவட் சூரிய சக்தி மின் உற்பத்தியை தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகன நிறுத்தங்களுக்கான கட்டணத்தை பயண அட்டை...

சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில் சேவை பாதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் பரனூர் பகுதியில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக, சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ரயில்கள் நிறுத்தப்பட்டதால் அவ்வழித்தடத்தில் பயணிக்கக்கூடிய மின்சார ரயில்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகவே பயணித்தன. தாமதத்தை தொடர்ந்து...

மெட்ரோ ரயில் வளாக வாகன நிறுத்தக் கட்டணம் இரு மடங்கு உயர்வு

சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் மாதாந்திர இருசக்கர வாகனம் நிறுத்தும் கட்டணம் 250 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில், மாதாந்திர இருசக்கர பாஸ் கட்டணம் 250 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தப்படுவதாக...

டெல்லியில் பெண் பயணிகள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் - முதலமைச்சர் கெஜ்ரிவால்

டெல்லியில் மெட்ரோ ரயில்களிலும், அரசு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் கடந்த சனிக்கிழமை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் பொதுப்போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தும் பெண்களுக்கு கட்டண சலுகை...

டெல்லியில் பெண்களுக்கு மெட்ரோ ரயில் கட்டணம், பேருந்து கட்டணம் இலவசம்

டெல்லியில் பெண்களுக்கு மெட்ரோ ரயில் கட்டணம், பேருந்து கட்டணம் இலவசமாக மாறக்கூடும். டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் மக்களவைத் தேர்தலில் பெற்ற தோல்வியை ஈடுசெய்யும் முயற்சியில் ஆம் ஆத்மி அரசு ஈடுபட்டுள்ளது. வாக்காளர்களைக் கவரும் வகையில் புதிய திட்டங்களையும்...

மெட்ரோ ரயில் நிலையங்களில் குடிநீர் சிக்கன நடவடிக்கை

மெட்ரோ ரயில் நிலையங்களில் குடிநீர் சிக்கன நடவடிக்கைகளுக்கு பயணிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தண்ணீர் சிக்கனத்தின் ஒரு பகுதியாக தரைக்கீழ்த் தளத்தில் உள்ள ரயில் நிலையங்களில் குளிர்சாதன வசதி படிப்படியாகக் குறைக்கப்படும் என்றும், இதன்மூலம்...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும், அப்போது 40 முதல் 50 கிலோ...

மெட்ரோ தொழிற்சங்கமா? தொழிலை கெடுக்கும் சங்கமா? சமூக வலைதளத்தில் கண்டனம்

சென்னை மெட்ரோ ரெயில் போக்குவரத்தை முடக்கி, பொதுமக்களை பாதிக்கின்ற வகையில் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், வருங்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் லட்சக்கணக்கான படித்த இளைஞர்கள் உரிய...