​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பருவமழை பொய்த்து, நிலத்தடி நீர் சரிந்த போதிலும் தண்ணீர் விநியோகம் -முதலமைச்சர்

பருவமழை பொய்த்து, நிலத்தடி நீர்மட்டம் சரிந்துவிட்ட போதிலும், தமிழகம் முழுவதும் முடிந்தவரை தண்ணீர் வழங்கி வருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.  பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி, தண்ணீர் பிரச்சனையை எழுப்பி பேசினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர், காவிரி...

மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் - கர்நாடக அமைச்சர்

மேகதாதுவில் அணை கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலில் வீணாக கலக்கும் நீரை தடுக்க தமிழகம் புதிய அணை கட்டினால் அதை கர்நாடகம் எதிர்க்காது என்றார். எத்தனை அணைகள்...

மேகதாது அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு கடிதம்

மேகதாதுவில் அணைகட்ட அனுமதி கோரி வரைபடம் மற்றும் புள்ளிவிவரங்களோடு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த 20ஆம் தேதி அனுப்பியுள்ள அந்த கடிதத்தில் பெங்களூருவைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான குடிநீருக்காகவும் மின் உற்பத்திக்காகவும் அணை கட்ட வேண்டியது அவசியம் என...

மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார். மேகதாதுவில் அணைகட்ட அனுமதி கோரி வரைபடம் மற்றும் புள்ளிவிவரங்களோடு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கர்நாடக...

மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கை, அரசியல் சட்டத்தையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் துச்சமென மதிக்கும் செயலாக இருப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி இறுதித் தீர்ப்பின் படி தமிழகத்திற்கு தண்ணீரைத் திறந்துவிட வேண்டிய...

பிரதமரிடம் 95 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவை சமர்ப்பித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மேகதாது அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்திற்கு அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் வந்த பிரதமர் நரேந்திரமோடியிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

மேகதாது திட்டம் குறித்து ராகுலிடம் பேச ஸ்டாலின் தயாரா ? - தம்பிதுரை

காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்ப்போம் என ஸ்டாலின் சொல்வது வேடிக்கையாக உள்ளது என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். கரூரில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.    ...

மேகதாது பிரச்சனை குறித்து சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்திற்கு அனுமதி அளித்ததற்கு கண்டனம் தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  மாலை 4 மணிக்கு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியதும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்மானத்தை முன்மொழிந்தார். இதைத் சட்டப்பேரவை எதிர்கட்சி...

மேகதாது அணை விவகாரம் தமிழக முதலமைச்சருக்கு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கடிதம்

மேகதாது அணை தொடர்பாகப் பேச்சு நடத்த நேரம் ஒதுக்கக் கோரித் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடக, தமிழக மக்களால் மிகவும் புனிதமாகக் கருதப்படும் காவிரியாறு இரு...

மேகதாது திட்டத்தில் ஆய்விற்காக மட்டுமே மத்திய அரசு கையெழுத்து - தமிழிசை

மீத்தேன் திட்டத்தில் ஸ்டாலின் ஆய்விற்காக மட்டுமே கையெழுத்திட்டதாக தெரிவித்ததாகவும், அதுபோல மேகதாது திட்டத்திற்கு ஆய்விற்காக மட்டுமே மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளதாகவும் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டாலின் மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்திட்டதாக ஒப்புக்கொண்டால்,...