​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பேனர் கலாச்சாரம் ஒழிய வேண்டும் இல்லையெனில் மக்களே அதை ஒழிப்பார்கள் - கமல்ஹாசன்

சென்னையில் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னையில் பேனர் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட சாலை விபத்தில் குரோம்பேட்டையைச் சேர்ந்த 23வயதான சுபஸ்ரீ லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்....

வேலூரில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சர்ச்சையில் சிக்கிய கமல்ஹாசன்

வேலூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், அங்குள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இலவச சீருடை வழங்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் காமராஜர் நூற்றாண்டு...

கைது நடவடிக்கைக்கு தான் அஞ்சவில்லை - கமல்ஹாசன்

நாதுராம் கோட்சே குறித்த தமது கருத்தில் தவறில்லை என கூறியுள்ள கமல்ஹாசன், கைது நடவடிக்கைக்கு தாம் அஞ்சவில்லை என தெரிவித்துள்ளார். தம்மை கைது செய்தால் மேலும் பதற்றம் அதிகரிக்கும் என்பதால், கைது செய்யாமலிருப்பதுதான் நல்லது என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவவர்...

கமல் பொதுக்கூட்டத்தில் காலணி, முட்டை, வீசியவர்கள் மீது தொண்டர்கள் தாக்குதல்

அரவக்குறிச்சி தொகுதியில் நேற்று இரவு பிரசாரம் செய்த மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது காலணி, முட்டை, சாணி மற்றும் கல்லும்  வீசப்பட்டது. இவற்றை வீசியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.  மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்...

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது குறித்து கமல்ஹாசன் பதில்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி இருப்பது, அவர்கள் இடையேயான பூசல் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய கமல்ஹாசன், சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லாத்...

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மம்தாவுடன் சந்திப்பு

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். முன்னதாக மேற்கு வங்கத்தின் டம்டம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தைப் பொறுத்தவரை தங்களது எதிர்க்கட்சி திமுக-அதிமுக-பாஜக தான் என விளக்கமளித்தார். அந்தமான்...

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பெயர்களை அறிவித்தார் கமல்

சென்னையில் மக்கள் நீதிமய்யக் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பெயர்களையும் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மக்கள்நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர்...

திருச்சியில் நாளை மக்கள் நீதி மய்யத்தின் மாநாடு

மக்கள் நீதி மய்ய மாநாடு திருச்சி பொன்மலை பகுதியில் நாளை நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக, சென்னை எழும்பூரில் இருந்து வைகை விரைவு ரயிலில் இன்று பிற்பகல் கமல்ஹாசன் பயணிக்கிறார். இந்த பயணத்தின் போது ஆங்காங்கே மக்களை சந்திக்கவும் கமல் திட்டமிட்டுள்ளார். அதற்கு ரெயில்வே...

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. ஐ.டி. உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி சமூக சேவைகளையும் செய்து வரும் செயல்பாட்டாளர்கள் 10-க்கும்...

சென்னையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்கூட்டம்

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. மதுரை பொதுக்கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் என்ற தமது கட்சியின் பெயரை அறிவித்த கமல்ஹாசன், முதல் முறையாக தலைநகர் சென்னையில் இன்று பொதுக்கூட்டம் நடத்துகிறார். மகளிர் தினத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில்...