​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாய்க்குட்டியை பிடிப்பதற்காக துரத்திச் சென்று கிணற்றில் விழுந்த சிறுத்தை

மகாராஷ்டிராவில் கிணற்றில் விழுந்த சிறுத்தையையும், நாய்க்குட்டியையும், 4 மணி நேரப் போராட்டத்துக்கு பின்னர் வனத்துறையினர் மீட்டனர். நந்தூர்பார் மாவட்டம் தெம்பே கிராமப் பகுதியிலுள்ள கிணறு ஒன்றில், நாய்க்குட்டி ஒன்றும், சிறுத்தை ஒன்றும் விழுந்து கிடந்தன. நாய்க்குட்டியை பிடிப்பதற்காக சிறுத்தை துரத்திச் சென்ற போது...

ஒருதலைக் காதலால் தீவைத்து எரிக்கப்பட்ட பெண் விரிவுரையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் ஒருதலைக் காதலால் தீவைத்து எரிக்கப்பட்ட பெண் விரிவுரையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த வாரம் திங்கட்கிழமை வழக்கம் போல் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தவரை, பின் தொடர்ந்த விகேஷ் நாக்ராலே என்பவன் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டு தப்பிச்...

CAA -க்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கு ராஜ் தாக்கரே எச்சரிக்கை

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக, மகாராஷ்டிரா நவநிர்மான சேனா கட்சியினர், மும்பையில், பிரம்மாண்ட பேரணி நடத்தினர். யாரிடம் மோதிப் பார்க்கிறீர்கள் என்று ஆவேச முழக்கமிட்டுள்ள மகாராஷ்ட்ரா நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வன்முறைப் போராட்டம்...

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா பிரம்மாண்ட பேரணி

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக, மகாராஷ்டிரா நவநிர்மான சேனா கட்சியினர், மும்பையில், பிரம்மாண்ட பேரணி நடத்தினர். அண்மையில் சிஏஏ சட்டத்திருத்தம் குறித்து கருத்துத் தெரிவித்த ராஜ்தாக்ரே, அதுகுறித்த நடைமுறைகளில் மாறுபாடு இருப்பினும், அண்டை நாடுகளிலிருந்து, இந்தியாவிற்குள், சட்டவிரோதமாக ஊடுருவியிருப்போரை, பிரதமர் நரேந்திர மோடி...

அல்போன்சா மாம்பழத்துக்கு கிராக்கி..!

மகராஷ்டிராவில் வரத்து குறைவு காரணமாக ஒரு டஜன் அல்போன்சா மாம்பழங்கள் 3 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. சிந்துதுர்க் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் ருசியான அல்போன்சா மாம்பழங்களுக்கு சந்தையில் அதிக வரவேற்பு உள்ள நிலையில் பெரும் பகுதி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த...

மகாராஷ்டிராவில் பெண் விரிவுரையாளர் உயிருடன் தீவைத்து எரிப்பு

மகாராஷ்டிராவில் கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வர்தா மாவட்டம் ஹிங்கன்காட்டில்(Hinganghat) உள்ள தனியார் கல்லூரியில் அந்தப் பெண் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று காலை கல்லூரிக்கு சென்றபோது, வழிமறித்த இளைஞன் மண்ணெண்ணெயை ஊற்றித் தீவைத்துள்ளான். தீப்பற்றியதால்...

நாக்பூர் அருகே ‘பாபநாசம்’ பட பாணியில் நடைபெற்ற கொலை சம்பவம்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பாபநாசம் பட பாணியில் நடைபெற்ற கொலை தொடர்பாக ஓராண்டுக்கு பின்னர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாக்பூர் கப்சி பகுதியில் உணவகம் நடத்தி வரும் லல்லு ஜோகேந்திரசிங் தாக்கூர் என்பவனுக்கும், அதே பகுதியில் வசித்து வந்த பங்கஜ் திலிப்...

பேருந்து, ஆட்டோ மோதி கிணற்றில் விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26-ஆக உயர்வு

மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு பேருந்தும், ஆட்டோவும் மோதி கிணற்றில் விழுந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. அந்த மாநிலத்தின் நாசிக் மாவட்டம், மாலேகான் டியோலா சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தும், ஆட்டோவும் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களும்,...

ரூ.10க்கு மதிய உணவளிக்கும் திட்டம் -மகாராஷ்ட்ரா அரசு அறிமுகம்

மகாராஷ்ட்ராவில் சிவசேனா அரசு பத்து ரூபாய்க்கு மதிய உணவளிக்கும் திட்டத்தை சோதனை முயற்சியாக தொடங்கியுள்ளது. சிவ போஜன் என்ற பெயரில் இந்த பிற்பகல் உணவுத்திட்டம் தற்போது மாவட்ட தலைநகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்பட இருப்பதாக சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு...

இன்று முதல் விடிய விடிய தூங்கா நகரமாகிறது மும்பை

மும்பை நகரம் இன்றிரவு முதல் தூங்கா நகரமாகிறது. விடிய விடிய மால்கள், திரையரங்குகள், உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகளை திறக்கலாம் என்று மாநில அரசு அனுமதியளித்துள்ளது. நாரிமன் பாயின்ட், காலா கோடா, பாந்த்ரா குர்லா வணிக வளாகம் ஆகிய மூன்று இடங்களில் இரவு...