​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஒரு தலைக் காதலால் சிறுமி கொலை..!

மாமல்லபுரம் அருகே காதலை ஏற்க மறுத்த 17 வயது சிறுமியை கத்தியால் குத்திக் கொன்ற ஆந்திராவைச் சேர்ந்த இளைஞனை போலீசார் கைது செய்தனர். செங்கற்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் கட்டிடம் ஒன்றில் கொத்தனாராகப் பணியாற்றி வரும் ஜெயராஜ்...

மாமல்லபுரத்தை அழகுபடுத்தி நிரந்தரமாக பாதுகாக்கக் கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மாமல்லபுரத்தை அழகுபடுத்தி நிரந்தரமாக பாதுகாக்கக் கோரிய வழக்கில் ஜனவரி 2ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை ஆஜராகும்படி உத்தரவிட நேரிடுமென உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மாமல்லபுரத்தை நிரந்தரமாக பாதுகாக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி கிருபாகரன் நவம்பர்...

மாமல்லபுரத்தையே குத்தகைக்கு எடுத்துருக்கோம்..! வசூல் பரிதாபங்கள்

வடிவேலு படத்தில் வரும் காமெடி காட்சி போல மாமல்லபுரத்தையே குத்தகைக்கு எடுத்திருப்பதாக கூறி தனியாக ஒருவர் பேரூராட்சி அதிகாரியின் ஒப்புதலுடன் அடாவடியாக பார்க்கிங் கட்டணம் வசூலித்து வருகின்றார். இரு நாட்டு தலைவர்களின் வருகைக்காக செய்த செலவுகளை ஈடுகட்ட மாவட்ட நிர்வாகம் செய்துள்ள வசூல் ஏற்பாடு...

மோடி - ஜின்பிங் மாமல்லபுர சந்திப்பு தமிழகத்திற்கு கிடைத்த பெருமை

இந்தியா- சீனா இடையிலான பேச்சுவார்த்தை மாமல்லபுரத்தில் நடைபெற்றது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணப்பட்டதால் தான் தமிழகத்திற்கு இந்த பெருமை கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணனை...

அழகு மிளிரும் மாமல்லபுரம்.. படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்..!

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்புக்காக செய்யப்பட்ட சிறப்பு ஏற்பாடுகளால் அழகு மிளிரக் காட்சியளிக்கும் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இன்று காலை...

பொது இடங்களை தூய்மையாகவும், நேர்த்தியாகவும் வைத்துக்கொள்வோம் என பிரதமர் மோடி அழைப்பு

மாமல்லபுரம் கடற்கரையில் நேற்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றினார். எழில்மிகு கடற்கரையில், புத்துணர்ச்சியூட்டும் நடைப் பயிற்சியும், உடற்பயிற்சியும் மேற்கொண்டதாகவும் ட்விட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். கடற்கரையில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக்...

டிராகனும், யானையும் சேர்ந்து நடனமாட முடியும் என நம்பிக்கை - சீன அதிபர் ஜின்பிங்

சீனாவின் டிராகனும், இந்தியாவின் யானையும் சேர்ந்து நடனமாடுவதுதான் இரு நாடுகளுக்கு இடையேயான சரியான வழிமுறையாகும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசியது குறித்து சீன அதிபர் ஜின்பிங் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் இருநாட்டு...

சீன அதிபர் அழைப்பு.. பிரதமர் மோடி ஏற்பு..!

தகவல் தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் இந்திய தொழில் அதிபர்கள் முதலீடு செய்ய சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார். அடுத்தாண்டு சீனாவில் நடைபெறும் முறைசாரா சந்திப்பில் பங்கேற்க வருமாறு ஜின்பிங் விடுத்த அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி...

சுத்தமாக மிளிரும் மாமல்லபுரத்தை காண மக்கள் ஆர்வம்

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பையொட்டி சுத்தமாகவும், வழியெங்கும் அலங்காரத்துடனும் காட்சியளிக்கும் மாமல்லபுரத்தைக்காண பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், அர்ஜூனன் தபசு, கடற்கரைகோயில், வெண்ணை உருண்டை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. இருநாட்டு தலைவர்களின்...

மாமல்லபுரத்தின் அழகை காக்க வேண்டும்..!

சீன அதிபரின் வருகையை ஒட்டி நடைபெற்ற பணிகளால் மாமல்லபுரம் புதுப் பொலிவு பெற்றுள்ள நிலையில் அங்கு மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைக்காமல், தற்போது ஜொலிக்கும் மாமல்லபுரத்தை அப்படியே பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. கண்ணை கவரும் அழகுடன் ஜொலிக்கும் மாமல்லபுரத்தின் இன்றைய...