​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நித்தியானந்தாவின் அகமதாபாத் ஆசிரமத்தை இடித்துத் தள்ளிய மாநகராட்சி அதிகாரிகள்

அகமதாபாதில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தை இடித்து தள்ள நேற்று ஜேசிபி இயந்திரங்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் முற்றுகையிட்டனர். இதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆசிரமத்தில் குழந்தைகளை கொடுமைப்படுத்தியதாகவும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அளிக்கப்பட்ட புகாரையடுத்து நித்தியானந்தைவை கைது செய்ய குஜராத் போலீசார்...

மெட்ரோ ரயில் பணியின் போது 4 கடைகள் சேதம்

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் மெட்ரோ ரயில் பணியின் போது  பூமிக்கு அடியில் ராட்சத ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டிய போது 4 கடைகள் சேதமடைந்து  சாய்ந்தன. வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை தற்போது மெட்ரோ ரயில்  திட்டப் பணிகள் நடைபெற்று...

ராட்சத பாறையில் சிக்கிய ஜே.சி.பி.ஆப்பரேட்டர் உயிரிழந்தார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் குவாரியில் ராட்சத பாறை விழுந்து படுகாயமடைந்த ஜே.சி.பி. ஆப்பரேட்டர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். துண்டத்தாரவிளையில் ஷாம் ராஜ் என்பவரது குவாரியில், விஜூ தமக்குச் சொந்தமான ஜே.சி.பி. இயந்திரம் மூலம் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென உருண்டு வந்த ராட்சத...

அழைத்துச் சென்ற முதியவர்களை மீண்டும் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இன்றைக்குள் ஒப்படைக்க தமிழக அரசுக்கு உத்தரவு

பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதியவர்களை இன்றே, அவ்வில்லத்துக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்லத்தில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள்...

நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் - சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

தேனி மாவட்டம் தேவாரம் அருகே, 1,500 கோடி ரூபாய் செலவில், செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வகம் குறித்து பார்க்கலாம். தேனி மாவட்டம் பொட்டிபுரம் அருகே அம்பரப்பர் மலைப்பகுதியில், ஐஎன்ஓ எனக்குறிப்பிடப்படும் நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நியூட்ரினோ என்பது அணு அடிப்படைத்துகள்களில்...

பஞ்சாபில் ஊதிய உயர்வு கேட்டு தேசிய நெடுஞ்சாலையில் போராடிய ஆசிரியர்கள் மீது தடியடி

பஞ்சாபில் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 7 ஆயிரம் ஆசிரியர்கள் மீது அம்மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி லூதியானா அருகே...

பார்வையாளர்களைக் கவர்ந்த அமெரிக்காவுக்கு வலசை வந்த பெரும் பச்சைக்கிளிகள்

அர்ஜெண்டினாவில் இருந்து அமெரிக்காவுக்கு வலசை வந்த பெரும் பச்சைக்கிளிகள் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றன. நியூயார்க் நகரின் பனிபடர்ந்த பகுதிகளில் கிரீன் மோங்க் என்ற பெரும் பச்சைக்கிளிகள் விளையாடி வருகின்றன. மேலும் அப்பகுதியில் உள்ள மரங்களையும், கட்டடங்களையும் தங்களின் தற்காலிக தங்குமிடமாக மாற்றியுள்ள கிளிகளை...

சட்டப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு - சசிகலா அண்ணன் மகன் விவேக் வெளிநாடுவாழ் இந்தியர் பிரிவில் சேர்க்கப்பட்டதாக தகவல்

அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதை லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடித்துள்ளது. அதமட்டும் இன்றி சசிகலாவின் அண்ணன் மகனும் ஜெயா தொலைக்காட்சியின் சி.இஓ.வுமான விவேக் ஜெயராமனுக்கும் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவில் இடம் ஒதுக்கீடு...

தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்பதைக் கண்டித்துப் நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீரை ஊற்றி பொதுமக்கள் போராட்டம்

சென்னை அருகே பூவிருந்தவல்லியில் தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்பதைக் கண்டித்துப் நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீரை ஊற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.  சென்னை அருகே பூவிருந்தவல்லியில் ரைட்டர் தெருவில் கழிவுநீர்க் கால்வாயில் குப்பைகள் கிடப்பதால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் தெருவில்...

புதுச்சேரி சட்டமன்றத்திற்குள் நுழைய முயன்ற பாஜக நியமன எம்எல்ஏ.க்கள் தடுத்து நிறுத்தம்

புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய முயன்ற, நியமன பாஜக எம்எல்ஏ.க்கள் 3 பேர் தடுத்து நிறுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளே அனுமதிக்க வலியுறுத்தி 3 பேரும் சட்டப்பேரவை வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடியது. முன்னதாக, காலை...