​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டைமன்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் மேலும் 70 பேருக்கு கொரோனா தொற்று

ஜப்பான் துறைமுக பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இருப்போரில் மேலும் 70 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவிற்கு சென்று வந்த டைமன்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் இருப்போரை தனது நாட்டுக்குள் ஜப்பான் முன்னெச்சரிக்கையாக அனுமதிக்கவில்லை. யோகோஹமா துறைமுக பகுதியில்...

சொகுசு கப்பலில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக ஜப்பான் அரசு இராணுவத்தை அனுப்ப முடிவு

கொரோனா வைரஸ் பீதியால் யோகோஹமா துறைமுக பகுதியில் 138 இந்தியர்கள் உள்ளிட்ட 3,700 பேருடன் நிறுத்தி கண்காணிக்கப்பட்டு வரும் சொகுசு கப்பலுக்கு ராணுவத்தை ஜப்பான் அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவுக்கு சென்று வந்த காரணத்தால், அக்கப்பலில் இருப்போர் ஜப்பானுக்குள் அனுமதிக்கப்படவில்லை. நேற்று...

யோஹோமா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் 138 பேர் இந்தியர்கள் என தகவல்

ஜப்பானின் யோகாஹாமா (Yokohama) பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இருப்போரில் 138 பேர் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சீனாவுக்கு சென்று வந்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் ஹாங்காங்கை சேர்ந்த 80 வயது பயணிக்கு கொரோனா வைரஸ் உறுதியானதால்,அக்கப்பலில் இருப்போர் ஜப்பானுக்குள்...

கொனரா வைரஸ்: ஒருவர் பலி - ஜப்பான்,தாய்லாந்தில் பீதி

கொரானா போன்ற மர்ம வைரஸ் தாக்குதலால் சீனாவில் ஏற்பட்டுள்ள இரண்டாவது மரணம் அந்த நாட்டிலும், ஜப்பான் மற்றும் தாய்லாந்திலும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய சீன நகரமான உகானில், 69 வயதுடைய நபர் கொனரா வைரஸ் தாக்குதல் போன்ற  அறிகுறிகளுடன்...

இந்தியா-ஜப்பான் கடலோர காவல் படையினரின் கூட்டுப் பயிற்சி சென்னையில் தொடக்கம்

இந்தியா-ஜப்பான் நாடுகளின் கடலோரக் காவல்படைகள் இடையே 5 நாள் ஒத்திகை, சென்னை கடற்பகுதியில் தொடங்கியுள்ளது. சயோக்-கய்ஜின் (Sahyog-kaijin) என்று அந்த ஒத்திகைக்கு பெயரிடப்பட்டுள்ளது. அதில் ஜப்பான் கடலோர காவல்படைக்கு சொந்தமான எசிகோ (Echigo) கப்பலும், இந்திய கடலோரக் காவல்படைக்கு சொந்தமான 4 கப்பல்கள்...

ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு 200 கிலோ எடை வரை தாங்கும் பிரத்யேக படுக்கைகள்

ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்காக மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை கொண்டு பிரத்யேகமாக படுக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 24-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளநிலையில் அதில் பங்கேற்கும் வீரர்களுக்காக தயாரிக்கப்பட்ட படுக்கைகள் ஊடகங்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டன. இந்த ஆண்டு...

ஜப்பானில் இருந்து கார்லோஸ் லெபனானுக்கு தப்பியது எப்படி?

நிதி மோசடி வழக்கில் சிக்கி ஜப்பானில் சிறை வைக்கப்பட்ட நிஸான் கார் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கார்லோஸ் கோஷன், அங்கிருந்து தப்பியது  குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.  சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடும் நிபந்தனைகளுடன் வீட்டுக்காவலில்...

டோரேமோனை மையமாக கொண்ட பொருள்களை விற்கும் கடை திறப்பு

கார்ட்டூன் கதாபாத்திரமான டோரேமோனை (Doraemon) மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பல்வேறு பொருள்களை விற்பனை செய்ய பிரத்யேக கடை ஜப்பானில் திறக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் 1969ம் ஆண்டு அறிமுகமான அக்கதாபாத்திரத்துக்கு உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்...

ஜப்பானில் பிறப்பு விகிதம் குறைவு -மரண விகிதம் அதிகரிப்பு

ஜப்பான் பிறப்பு விகிதம் இந்த ஆண்டு மிகவும் குறைந்து காணப்படுகிறது. மிகவும் வேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் ஒன்றான ஜப்பானில் அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 8 லட்சத்து 64 ஆயிரமாகும். 1899ஆம்...