​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஈரானில் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் தாக்குதல்

ஈரானில் ராணுவ அணிவகுப்பின் போது தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் உள்பட 24 பேர் பலியாயினர். 53 பேர் படுகாயமடைந்தனர். 1980-முதல் 1988 வரை நடந்த ஈரான்-ஈராக் போர் தொடங்கியதன் நினைவாக ஈரானில் ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது.  ஆவாஸ்...

ஈரானுடன் வர்த்தக உறவுகள் வைத்துக் கொள்ளும் நாடுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமெரிக்கா

ஈரானுடன் வர்த்தக உறவுகள் வைத்துக் கொள்ளும் நாடுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் வெளியேறுவதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்தார். மேலும், ஈரானுடன் வர்த்தக...

ஈரானிடமிருந்து வாங்கப்படும் எண்ணெயின் அளவை பாதியாக குறைக்க இந்தியா திட்டம்

அமெரிக்காவின் பொருளாதாரத் தடையில் இருந்து தப்புவதற்காக ஈரானிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவைக் குறைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ஈரானுக்கு பொருளாதாரத் தடை விதித்துள்ள அமெரிக்கா, அடுத்த மாதம் 4 ஆம் தேதி முதல் ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கும் நெருக்கடி கொடுத்து...

ஈரான் வான்பரப்பில் கூடுதல் கவனத்துடன் விமானங்களை இயக்குமாறு அமெரிக்கா எச்சரிக்கை

ஈரான் வான்பரப்பில் கூடுதல் கவனத்துடன் விமானங்களை இயக்குமாறு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா, அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் இருநாடுகள் இடையே மீண்டும் பகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து...

பேச்சுக்களைத் தொடங்கலாம் என அமெரிக்கா நாள்தோறும் சேதியனுப்பி வருகிறது - ஈரான் அதிபர் தகவல்

பேச்சுக்களைத் தொடங்கலாம் எனக் கோரி அமெரிக்கா நாள்தோறும் சேதி அனுப்புவதாக ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார். மே மாதத்தில் ஈரானுடனான அணுஆற்றல் உடன்படிக்கையை அமெரிக்கா முறித்துக் கொண்டது. இதையடுத்து ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது எனப் பல்வேறு நாடுகளுக்கு...

சாபாகர் துறைமுகம் இன்னும் ஒரு மாதத்துக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் - ஈரான் அமைச்சர்

சாபாகர் துறைமுகம் இன்னும் ஒரு மாதத்துக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என ஈரான் அமைச்சர் அப்பாஸ் அக்கவுண்டி தெரிவித்துள்ளார். ஈரானில் சாபாகர் துறைமுகத்தில் கட்டமைப்பு வசதிகள் செய்து இந்தியா மேம்படுத்தியுள்ளது.   இந்தத் துறைமுகம் வழியாக ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்குச் சரக்குகளை அனுப்ப...

குட்கா முறைகேடு புகார் தொடர்பாக தமிழக DGP டி.கே.ராஜேந்திரன் வீடு உட்பட 40 இடங்களில் CBI அதிகாரிகள் அதிரடி சோதனை

குட்கா முறைகேடு வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் வீடுகள் உள்பட 40 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் பான் மசாலா, குட்கா ஆகியவற்றை உற்பத்தி செய்யவும்,...

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்க அமெ., திட்டம் என தகவல்

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்க அமெரிக்கா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானுடான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த அமெரிக்கா, அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தவிர்க்குமாறு, இந்தியா...

எந்திரன் படத்தின் கதைக்கு உரிமை கோரிய வழக்கில் இயக்குனர் ஷங்கருக்கு ரூ.10,000 அபராதம்

எந்திரன் திரைப்பட கதை உரிமை கோரிய வழக்கில் சாட்சி அளிக்க நீதிமன்றத்திற்கு ஆஜராகாத இயக்குனர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இது தொடர்பாக ஆரூர் தமிழ்நாடன் என்பவர், சிவில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில்,...

இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஈரானுக்கு 2 நாள் பயணம்

ஈரானுடனான அணுசக்தி தடுப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொண்ட பின் முதல்முறையாக, இங்கிலாந்து அமைச்சர் ஒருவர் ஈரானுக்கு சென்றுள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு ஈரான், ஈராக், ரஷ்யா உள்ளிட்ட 6 நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்திலிருந்து, கடந்த மே மாதம் டிரம்ப்...