​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

SI வில்சன் கொலை வழக்கு: கைதான தீவிரவாதிகளிடம் போலீசார் தீவிர விசாரணை

களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான 2 தீவிரவாதிகளை காவலில் எடுத்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குமரி மாவட்டம் களியக்காவிளையிலுள்ள சோதனைச் சாவடியில் கடந்த 8ம் தேதி பணியில் இருந்த சிறப்பு காவல் ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்...

யமுனா எக்ஸ்பிரஸ்வே முறைகேடு வழக்கு - விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு

டெல்லி -ஆக்ரா இடையேயான யமுனா அதிவிரைவு நெடுஞ்சாலை அமைத்ததில் நடந்ததாக கூறப்படும் 126 கோடி ரூபாய் ஊழல் குறித்த விசாரணை சி.பி.ஐ.இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு, இந்த நெடுஞ்சாலைக்கான திட்டப்பணிகளை அப்போதைய முதலமைச்சர் மாயாவதி துவக்கி வைத்தார். பின்னர் அவரது ஆட்சி...

வந்தே பாரத் ரயில் பெட்டிகள் ஊழல் -ரயில்வே லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணை தீவிரம்

வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிப்பில் ஊழல் நடந்ததாக எழுந்த புகார் தொடர்பான விசாரணையை, ரயில்வே லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட, வந்தே பாரத் எனப்படும் ரயிலை கடந்த பிப்ரவரி...

உடலில் ஊசியுடன் வைத்து தையல் : டாக்டர், நர்ஸ் சஸ்பெண்ட்

ராமநாதபுரம் அருகே, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவத்துக்குப்பின் உடைந்த ஊசியுடன் வைத்து தையல் போட்டதால், உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மருத்துவர், செவிலியர் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உச்சிப்புளியை அடுத்த மரவெட்டி...

வேலை கிடைக்காத விரக்தியில் கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர்

வேலை கிடைக்காத விரக்தியில் ஆந்திரா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இளைஞரிடம் சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று நள்ளிரவு சென்னை ஜேஜே நகரில் உள்ள ஆந்திரா வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு நுழைந்த இளைஞர், தான் வைத்திருந்த...

மாணவி தற்கொலை விவகாரம் - ஐஐடி பேராசிரியர்களுக்கு சம்மன்

ஐஐடி மாணவி தற்கொலை வழக்கில் விசாரணை மேற்கொண்டு வரும் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், மாணவியின் செல்போன் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள 3 பேராசிரியர்களுக்கு இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீபின் தற்கொலை வழக்கை, மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையின்...

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட மேலும் தடை நீட்டிப்பு

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட வருகிற 22ஆம் தேதி தடை விதித்துள்ள உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒத்திவைத்திருக்கிறது. 2016ஆம் ஆண்டு தேர்தலில் ராதாபுரம் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்ட இன்பதுரை, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர்...

தஞ்சை பெரிய கோவிலில் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நந்தி சிலையை உடைக்க முயற்சி

தஞ்சை பெரிய கோவில் கருவறைக்கு முன்பாக கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நந்தி சிலையை உடைக்க முயன்ற அடையாளம் தெரியாத நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெருவுடையார் சன்னிதானத்திற்கு எதிராக இரண்டு நந்தி சிலைகள் கண்ணாடி பெட்டிக்குள் வைத்து பாதுக்கப்பட்டு...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கடன் தொல்லையால் தற்கொலை

விருதுநகர் அருகேயுள்ள பெரியவள்ளிகுளத்தில், கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இன்பமூர்த்தி என்பவர், கடந்த 25 வருடமாக பெரியவள்ளிகுளத்தில் தனியா எனப்படும் மல்லி மில் வைத்து தொழில் செய்துவந்துள்ளார். இதனிடையே, மல்லி...

பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்குமிடையே துப்பாக்கிச் சண்டை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்குமிடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. பந்திபோரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது...