​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் இந்தோனேசியா..!

இந்தோனேசியாவில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தலைநகர் ஜகார்த்தாவின் கிழக்கு பகுதிகளில் தாழ்வான குடியிருப்புகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் பொதுமக்கள் ரப்பர் மீட்பு படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கனமழையால் ஜாவா, பாலி, நுசா தெங்கரா உள்ளிட்ட...

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

கிழக்கு திசை காற்றின் தாக்கம் காரணமாக, தமிழ்நாட்டின், ஓரிரு இடங்களில், இன்றும், நாளையும், மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர கர்நாடகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காணப்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் சில இடங்களில்...

ஆஸ்திரேலியாவில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை

ஆஸ்திரேலியாவில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை கொட்டி தீர்த்ததால் கடந்த 3 ஆண்டுகளாக நிலவி வந்த வறட்சியின் தாக்கம் தணித்துள்ளது. அந்நாட்டின் சிட்னி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல...

பல மாதங்களாக எரிந்த காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வந்த கனமழை

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக  பல நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்தாலும், மாநிலத்தை வாட்டிய காட்டுத் தீயின் உக்கிரம் வெகுவாக குறைந்துள்ளது. 24 மணி நேரத்தில் மாநிலத்தின் பல இடங்களில்  20 சென்டிமீட்டரும்...

60 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டித் தீர்த்த கனமழை

 ஆஸ்திரேலியாவின் கிழக்கு கரையோர மாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழை, பல இடங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியதுடன் புதர்த் தீயால் பாதிக்கப்பட்ட காடுகளுக்கு புத்துயிர் அளித்துள்ளது கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலியாவை வாட்டி வதைத்த கடும் வெயிலால் நியூசவூத் வேல்ஸ், குவின்ஸ்லாந்தின் உள்ளிட்ட மாநிலங்களில் புதர்த்தீ...

சவுத் ஐலேண்ட் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை

நியூசிலாந்தின் சவுத் ஐலேண்ட் (South island ) பகுதியில் பெய்த திடீர் கனமழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான சவுத் ஐலேண்ட் பகுதியின் பல இடங்களில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழையால்,...

குயின்ஸ்லேண்டில் கொட்டித்தீர்க்கும் கனமழை - சிட்னியில் தகிக்கும் வெப்பம்

ஆஸ்திரேலியாவில், புதர் தீயின் தாக்கம் மீண்டும் வேகமெடுத்திருப்பதால், கான்பரா உள்ளிட்ட நகரங்களில் வசிப்போருக்கு அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கான்பராவின் நாமாட்கீ(Namadgi) தேசிய பூங்காவில் புதர் தீயில், சுமார் 8,000 ஏக்கர் பரப்பிலான வனங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இதற்கிடையே, குயின்ஸ்லேண்டு மாகாணத்தின் வடக்குப் பகுதியில், கனமழை...

பிரேசில் கனமழையினால் இதுவரை 46 பேர் பலி

பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் பெய்த திடீர் கனமழை மற்றும் அதைத் தொடர்ந்து நேரிட்ட வெள்ளத்துக்கு 46 பேர் பலியாகியுள்ளனர். ரீயோ டி ஜெனிரோ, மினாஸ் கெராய்ஸ் (Minas Gerais), எஸ்பிரிடோ சான்டோ(Espirito Santo) உள்ளிட்ட மாகாணங்களில் புயல் காற்றுடன் கனமழை கொட்டி...

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். 2 நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை, மினாஸ் ஜெரியாஸ்(Minas Gerias) மாநிலத்தில் உள்ள இபிரைட்(Ibirite) நகரை புரட்டிப்போட்டது. பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் 2...

ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை

ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை கொட்டி வரும் நிலையில் மழை நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. துபாயில் பெய்த திடீர் கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. துபாயில்...