​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த "பொதுமக்கள் பங்கீடு" பெறுவதில் இருந்து விலக்கு?

அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த பொது மக்கள் பங்கீடு பெறுவதில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் பள்ளிக்கல்வி துறைக்கு அதிகபட்சமாக 34 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய திமுக...

கண்ணைக்கட்டி சாதனை...! அசத்தும் பள்ளி மாணவர்..!

கரூர் மாவட்டத்தைச்சேர்ந்த 13 வயது மாணவர், கண்களை துணியால் கட்டிக்கொண்டு, சுற்றி உள்ளதை சரியாக கூறி அசத்துவதுடன், அரசு அனுமதித்தால் கண்ணை கட்டி தேர்வு எழுத தயார் என்றும் தெரிவித்துள்ளார்.  கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோவக்குளம் கிராமத்தை சேர்ந்த...

அரசுப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச பாடத்திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளி மாணவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேச பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மதுரை ஆரப்பாளையத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர்,இன்னும்  2 மாதத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சரளமாக...

தமிழ்நாடு U - 19 கிரிக்கெட் அணியில் அரசுப்பள்ளி மாணவன் தேர்வு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவன் ஒருவர் 19 வயதிற்குட்ப்பட்டோருக்கான தமிழக கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு தேர்வாகி உள்ளார். வெட்டுப்பட்டான்குட்டை பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி - பரிமளா தம்பதியின் மூத்த மகன் சஞ்சய் குமார். சிறுவயது முதலே கிரிக்கெட் மீது...

பிரதமருடன் கலந்துரையாட கட்டுரைப் போட்டி

பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடுவதற்காக மத்திய அரசால் நடத்தப்படும் கட்டுரைப் போட்டியில் அரசுப்பள்ளி மாணவர்களை பங்குபெற வைக்குமாறு  முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி 16-ம் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்....

காண்போரை வியப்பில் ஆழ்த்தும் சுரைக்குடுவை கலைப் பொருட்கள்...!

புதுச்சேரியில் சுரைக்காய் குடுவைகளைக் கொண்டு விதவிதமான, அழகழகான பல்வேறு நுண்கலைப் பொருட்களை உருவாக்கி அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தி வருகின்றனர். புதுச்சேரி சேலியமேடு கவிஞரேறு வாணிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளியில் நகை வடிவங்கள், தெருக்கூத்து கலைஞர்களின் உருவங்கள், தெய்வச் சிலைகள், போர்க்கள வீரர்கள் போன்றவற்றை...

கல்லூரி வகுப்பறைக்குள் அரசுப் பள்ளி ஆசிரியை மர்ம மரணம்..!

சென்னை அரசுப் பள்ளி ஆசிரியை அரும்பாக்கம் டிஜி வைஷ்ணவா கல்லூரி வகுப்பறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்தவர் ஹரி சாந்தி....

பி.இ. படித்தவர்களும் அரசு பள்ளிகளில் கணித ஆசிரியர் ஆகலாம்

பி.இ.படிப்பில் எந்த பாடத்தை தேர்வு செய்து படித்தவர்களும் தமிழக அரசு பள்ளிகளில் இனி கணித ஆசிரியர் ஆகலாம் என்று தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசுப்பணிகளில் சேர விண்ணப்பிக்கும் பட்டதாரிகள் அரசாணையில் உள்ள படிப்புகள் தவிர பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் புதிய...