​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பல மாதங்களாக எரிந்த காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வந்த கனமழை

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக  பல நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்தாலும், மாநிலத்தை வாட்டிய காட்டுத் தீயின் உக்கிரம் வெகுவாக குறைந்துள்ளது. 24 மணி நேரத்தில் மாநிலத்தின் பல இடங்களில்  20 சென்டிமீட்டரும்...

மலேசியாவில் காட்டுத் தீயினால் பரவும் புகைமூட்டம்

மலேசியாவில் பல்வேறு இடங்களில் பரவிவரும் காட்டுத் தீயினால் புகை மூட்டம் அதிகரித்த வண்ணம் இருப்பதை அடுத்து, 20 லட்சம் மாணவர்களுக்கு அரசு முக கவசங்களை வழங்கியுள்ளது. காலிமன்தன், போன்ற அக்கம் பக்கம் உள்ள வனப்பகுதிகளில் இருந்தும் புகை பரவிவருகிறது. சுமத்ரா தீவில் ஏற்பட்ட...

கொலம்பியா நினைவு சின்னம் அமைந்துள்ள பகுதியில் பயங்கர தீவிபத்து..!

கொலம்பியா நாட்டின் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள மலையடிவார சுற்றுலாத்தலங்களில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர். அந்நாட்டின் காலி நகரில், மலையடிவாரத்தை ஒட்டி கிறிஸ்து அரசரின் நினைவு சின்னம் அமைந்துள்ளது. இதனை காண உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள்...

உலக நாடுகளின் உதவியை நிராகரித்த பிரேசில் அதிபர்...

தீயில் கருகிய அமேசான் காடுகள் மறுசீரமைப்புக்காக ஜி 7 நாடுகள் சார்பில் 20 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி அளிக்கப்படும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் அறிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய மழைக்காடுகள் கொண்ட அமேசானில் திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் தீவிபத்துகள் உலக நாடுகளுக்கு கவலையை...

ஸ்பெயினில் காட்டுத் தீ பரவியதால் வனப்பகுதி கருகியது

ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் பிராந்தியத்தில் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருகிறது. தீயணைப்பு வீரர்கள் தீ அங்குள்ள தேசிய வனவிலங்குப் பூங்காவுக்கு பரவாமல் தடுக்க கடுமையாகப் போராடி வருகின்றனர். அவசர கால சேவைகள் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 35 தீயணைப்பு வீரர்கள் 11 ஹெலிகாப்டர்களுடன்...

இந்தோனேஷியாவில் காட்டுத் தீயால் ஆறு மாகாணங்களில் அவசர நிலை

வனத்தில் பற்றி எரியும் காட்டு தீயால் இந்தோனேசியாவின் ஆறு மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டின் ரியூ, தெற்கு சுமத்ரா, ஜாம்பி, மேற்கு, தெற்கு, மத்திய கலிமந்தான் ஆகிய ஆறு மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அந்த மாகாணங்களில் உள்ள...

சிம்லா அருகே வனப்பகுதியில் திடீரென தீ விபத்து

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் அரியவகை மரங்கள் மற்றும் செடிகள் எரிந்து சாம்பலாயின. கோடை காலத்தை முன்னிட்டு சிம்லா அருகில் ஏராளமான அரியவகை செடிகள் புதிதாக நடப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தன. இந்நிலையில் அந்த வனத்தின் வடக்குப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதில் புதிதாக...

கனடாவில் பயங்கர காட்டுத் தீ

கனடாவில் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கனடாவின் அல்பெர்டா((Alberta)) மாகாணத்தில், வனப்பகுதியில் கடந்த இரு தினங்களாக தீப்பற்றி எரிந்து வருகிறது. சுமார் 97,000 ஹெக்டேர் பரப்பளவில் தீ கொளுந்துவிட்டு எரிந்து புகை மண்டலமாக காட்சியளித்து வரும்...

பெர்த் புறநகர் பகுதியில் உள்ள வனத்தில் பற்றிப்பரவும் காட்டுத்தீ

ஆஸ்திரேலியா நாட்டின் மேற்கு பகுதிகளில் அமைந்திருக்கும் வனத்தில், பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டிருக்கிறது. உலக முழுவதும் பல்வேறு நாடுகளை குளிர்வாட்டிக் கொண்டிருக்க, பூமத்திய ரேகைக்கு கீழே அமைந்திருக்கும் பல நாடுகளை வெயில் வாட்டியெடுக்கிறது. இந்த வகையில், ஆஸ்திரேலியாவும், கடுமையான வெயிலால் அவதிக்கு ஆளாகியிருக்கிறது. நாளுக்குநாள்...

காட்டுத் தீ எரியும் போது காரில் சென்ற தந்தையும், மகனும் உயிர் தப்பிய அதிசயம்

அமெரிக்காவில் காட்டுத் தீயில் சிக்கிய தந்தையும், மகனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். மாண்டனா மாகாணத்தில் உள்ள கிளாஸியர் தேசியப் பூங்காவில் 7 ஆயிரத்து 800 ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் பில்டன்...