​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாயைப் போல புலியை துண்டால் இழுத்த வனத்துறை ஊழியர்கள் பணியிடை நீக்கம்

சத்தீஷ்கர் மாநிலத்தில் வனத்திற்குள் சுற்றுலா பயணிகளை புலி விரட்டிவந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ராய்ப்பூரின் புறநகர் பகுதியில் உள்ள விலங்கியல் பூங்காவில் சில சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் சென்றனர். அப்போது புலி ஒன்று சுற்றுலாப் பயணிகள் இருந்த வாகனத்தின் அருகில் நின்றது....

ஆஸ்திரேலியா - அதீத பருவநிலை ஏற்ற இறக்கம்

ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகளாக நிலவி வரும் பருவநிலை நெருக்கடியை பொருட்படுத்தாதன் விளைவுதான் தற்போதைய இயற்கை பேரழிவுக்கு காரணம் என்றும் இது உலக நாடுகளுக்கான எச்சரிக்கை என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  தீவு கண்டமான ஆஸ்திரேலியாவில் 1910 ஆம் ஆண்டில் இருந்தே படிபடியாக உயர்ந்து...

பல மாதங்களாக எரிந்த காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வந்த கனமழை

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக  பல நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்தாலும், மாநிலத்தை வாட்டிய காட்டுத் தீயின் உக்கிரம் வெகுவாக குறைந்துள்ளது. 24 மணி நேரத்தில் மாநிலத்தின் பல இடங்களில்  20 சென்டிமீட்டரும்...

தமது காலணியை பழங்குடியின மாணவரை கொண்டு கழற்றிய அமைச்சர் - வீடியோ

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,  தமது காலணியை  பழங்குடியின மாணவரை கொண்டு கழற்றச் செய்த வீடியோ வெளியாகி சர்ச்சையாகியுள்ளது. முதுமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள தெப்பக் காட்டில்...

மரங்களை வெட்டியதால் 10க்கும் மேற்பட்ட கோலாக்கள் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் பண்ணை ஒன்றில் மரங்களை வெட்டியதால் 10க்கும் மேற்பட்ட கோலாக்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்ஜ்வாட்டர் என்ற இடத்தில் ப்ளூ கம்(Blue Gum) பண்ணையில் மரங்கள் வெட்டப்பட்டதால் அங்கு வசித்து வந்த கோலாக்கள் பல உயிரிழந்தன. படுகாயம் அடைந்த...

இருசக்கர வாகனத்திற்கு வழிவிட்டு நின்ற பெண் சிங்கம் ! வைரலாகும் வீடியோ காட்சிகள்

குஜராத் மாநிலம் கிர் சரணாலயத்தின் வெளிப்புற பகுதியில் பெண் சிங்கமும் அதன் குட்டிகளும், இருசக்கர வாகனத்திற்கு வழிவிட்டு நிற்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் பர்மல் நத்வானி வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், சிறிய பாதையில் செல்லும் தாய் சிங்கத்தை...

நிறைவடைந்த யானைகள் முகாம்.. பிரியாவிடை பெற்ற யானைகள்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 48 நாட்களாக நடைபெற்று வந்த யானைகள் முகாம் நிறைவடைந்த நிலையில், முகாமில் பங்கேற்ற யானைகளும் பாகன்களும் ஒருவரை ஒருவர் பிரிய மனமின்றி பிரிந்து சென்றனர். மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் 12 வது யானைகள் நல்வாழ்வு முகாம்...

கிணற்றில் தவறி விழுந்த யானை குட்டி மீட்பு

ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா வனப்பகுதியில் இருந்து பான்டோலி என்ற கிராமத்தில் தண்ணீர் தேடி வந்த குட்டியானை ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டது. நள்ளிரவில் யானையின் அழுகுரலைக் கேட்ட கிராமவாசிகள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து யானையை மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பல மணி...

குடகு மலை அருகே 12 அடி நீள ராஜ நாகத்தை வனத்துறையினர் மீட்பு

கர்நாடக மாநிலம் குடகு மலை அருகே 12 அடி நீள ராஜ நாகத்தை வனத்துறையினர் பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வஜ்ராப்பேட்டை என்ற இடத்தில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் 12 அடி நீள ராஜநாகம் ஊர்ந்து கொண்டிருந்ததை கண்டு பீதியடைந்த பொதுமக்கள்,...