​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

செலவீனம், போட்டியை சமாளிப்பதற்காக ஆட்குறைப்பு நடவடிக்கையில் செல்போன் நிறுவனங்கள்

மைக்ரோமேக்ஸ், லாவா, இண்டெக்ஸ் போன்ற செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனைப் பிரிவு ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோரை பணிநீக்கம் செய்துள்ளன. செலவீனங்களைக் குறைப்பதற்காக மறைமுக ஊழியர்களை பணிநீக்கம் செய்வதென ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கார்பன், விவோ, ஓப்போ உள்ளிட்ட நிறுவனங்கள்,...

ஊழியர்களுக்கு இனவெறியை களையும் பயிற்சி அளிப்பதற்காக, அமெரிக்காவில் 8,000 கடைகளை மே 29ஆம் தேதி மூடுகிறது ஸ்டார்பக்ஸ்

ஊழியர்களுக்கு இனவெறியை களையும் பயிற்சி அளிப்பதற்காக, ஸ்டார்பக்ஸ் காஃபி நிறுவனம், அமெரிக்காவில் உள்ள தனது 8 ஆயிரம் கடைகளை மே 29ஆம் தேதி மூடவுள்ளது. உலகம் முழுவதும் புகழ்பெற்ற காஃபி நிறுவனமான ஸ்டார்பக்ஸுக்கு அமெரிக்காவில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அதில்...

ராஜஸ்தானில் அரசுப் பணியாளர் தேர்வாணயத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் நீதிசாஸ்திரா என்ற பெயரில் பகவத்கீதை பாடம் சேர்ப்பு

ராஜஸ்தான் அரசுப் பணியாளர் தேர்வாணயத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் நீதி சாஸ்திரா என்ற பெயரில் பகவத் கீதை சேர்க்கப்பட்டுள்ளது. Role of Bhagavad Gita in management and administration என்ற பாடத்தில் கிருஷ்ணனுக்கும் - அர்ஜுனனுக்கும் இடையே குருஷேத்திரப் போருக்கு முன்...

GST-யின் தாக்கத்தால் தனியார் நிறுவன ஊழியர்களின் சம்பளம் கணிசமான அளவு குறைய வாய்ப்பு

ஜி.எஸ்.டி. காரணமாக ஊழியர்களின் ஊதிய தொகுப்பில் முக்கிய மாற்றங்களை நிறுவனங்கள் செய்யும் என்பதால், சம்பளத்தில் கணிசமான அளவுக்கு மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வழங்கும் வீட்டு வாடகை, தொலைபேசி கட்டணம், சுகாதாரக் காப்பீடு உள்ளிட்ட படிகள் குறிப்பிட்ட...

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மாற்றியமைப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 5%இல் இருந்து 7% ஆக அகவிலைப்படி மாற்றியமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை சம்பளத்தில் இருந்து 7% ஆக அகவிலைப்படி வழங்கப்படும் என்றும், ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு அளிக்கப்படும்...

முழு அடைப்பு நேரம் முடியும் முன்னரே ஜவுளிக்கடையை திறந்ததாக பாமகவினர் - ஊழியர்கள் மோதல்

கடலூரில் பா.ம.க.வின் முழுஅடைப்பு நேரம் முடியும் முன்பே கடையைத் திறந்ததாகக் கூறி, ஜவுளிக்கடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாமகவினருக்கும், கடை ஊழியருக்கும் மோதல் ஏற்பட்டது. பா.ம.க. அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்பின்பேரில், கடலூரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப் பட்டிருந்தன. சிதம்பரம் சாலையில் உள்ள கே.வி....

நாட்டின் வளர்ச்சி அரசு ஊழியர்களின் கையில்தான் உள்ளது : கேரள முதலமைச்சர் பினராய் விஜயன்

நாட்டின் வளர்ச்சி அரசு ஊழியர்களின் கையில்தான் உள்ளது என்று கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற அரசு ஊழியர்களின் சம்மேளன மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், நாட்டின் வளர்ச்சி மட்டுமின்றி ஒவ்வொரு மாநிலங்களின் வளர்ச்சியும் அந்தந்த மாநில அரசு...

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரயில்பெட்டிகள் பின்னோக்கி ஓடிய விவகாரத்தில் ரயில்வே ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்ட்

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சின் இல்லாமல் 10 கிலோ மீட்டர் தூரம் ஓடிய விவகாரத்தில் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அகமதாபாத்தில் இருந்து பூரி நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று ஒடிசாவின் திட்லாகர் ரயில் நிலையத்தில் வேறு பெட்டிகளை...

குட்கா வழக்கில் சிறைக்கு அனுப்பியதால், முதலாளியை பழித்தீர்த்த முன்னாள் ஊழியர்...!

சென்னையில் சரக்கு வாகனத்தை மறித்து 10 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார்  கைது செய்துள்ளனர். உரிமையாளரைப் பழிவாங்க ஊழியர்களே திட்டமிட்டு இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது அம்பலமாகி உள்ளது.  சென்னை அரும்பாக்கம் திருவீதியம்மன் கோவில்...

குரங்கணி தீ விபத்து வழக்கில் டிரக்கிங் கிளப்பைச் சேர்ந்தவர் முன் ஜாமீன் கோரி மனு

குரங்கணி தீ விபத்து வழக்கில் சென்னை டிரக்கிங் கிளப்பைச் சேர்ந்தவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.சென்னை பாலவாக்கத்தில் குடியிருக்கும் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பீட்டர் வான் கெய்ட்டின் மனுவில் தன்னார்வலர்கள் உதவியுடன் சென்னை டிரெக்கிங்...