​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வகுப்பறை வன்முறையால் விபரீதம்..! மாணவன் தற்கொலை.!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள பாத்திமா மெட்ரிகுலேசன் பள்ளி வகுப்பு அறையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த சண்டையில் மயக்கமடைந்த மாணவர் இறந்து விட்டதாக கருதி தாக்குதலில் ஈடுபட்ட மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். பள்ளி வகுப்பறையில் மாணவர்கள்...

முகத்தை அடையாளம் கண்டு இயங்கும் தொழில்நுட்பம் ஆபத்தானது என Microsoft எச்சரிக்கை

Facial Recognition எனப்படும் முகத்தை அடையாளம் கண்டு இயங்கும் தொழில்நுட்பம் மிகவும் ஆபத்தானது என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே அதை அமெரிக்க அரசு நெறிமுறைபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் போலீசாருக்கு மிகவும் உதவும்...

குஜராத் மாநிலத்தில் சேதமடைந்த ஆற்றுப்பாலத்தை பெரியவர்களின் துணையுடன் கடக்கும் மாணவர்கள்

குஜராத் மாநிலத்தில் 2 மாதங்களுக்கு முன் சேதமடைந்த ஆற்றுப்பாலம் சீர்செய்யப்படாததால், பள்ளி மாணவர்கள் ஆபத்தான வகையில் பாலத்தை கடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கெடா மாவட்டத்தின் நைகா-பெராய் கிராமங்களுக்கு இடையே ஆற்றுப்பாலம் உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன் உடைந்துவிழுந்த இந்த பாலத்தை சீர்செய்ய...

ஜம்மு காஷ்மீரின் ஜீலம் நதியில் அபாயக்கட்டத்தைத் தாண்டிய வெள்ளப்பெருக்கு

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஜம்மு காஷ்மீரின் ஜீலம் நதியில் வெள்ளப்பெருக்கு அபாயக்கட்டத்தை தாண்டி உள்ளது. மேலும், ஸ்ரீநகர் உட்பட தெற்கு காஷ்மீரின் தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன....

சீனாவின் மற்றொரு விண்வெளி ஆய்வு மையம் செயலிழந்துள்ளதால், பூமியில் விழும் அபாயம் உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை

சீனாவால் அனுப்பட்ட விண்வெளி ஆய்வு மையம் ஒன்று செயலிழந்துள்ளதால் விரைவில் பூமியில் விழும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. டியான்காங் 2 என்ற விண்வெளி ஆய்வு மையத்தை கடந்த 2016ம் ஆண்டு சீனா விண்ணுக்கு அனுப்பியது. இந்த ஆய்வு மையம் பூமிக்கு மேலே...

ஆலைகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதி வேகமாக வழங்கப்படுவது மதிப்பீட்டின் தரத்தை பாதிக்கும் - சமூக ஆர்வலர்கள்

இந்தியாவில் ஆலைகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதி மிக விரைவாக வழங்கப்படுவது எச்சரிக்கைக்குரியது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டில் 38 விழுக்காடு திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 100 நாட்களுக்குள்ளாக அனுமதி வழங்கி இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு திட்டத்துக்கு...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுசூழல் பாதிப்பு காரணமாக ஏரிகள் அழியும் அபாய கட்டத்தை எட்டியிருப்பதாக மக்கள் புகார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுசூழல் பாதிப்பு காரணமாக ஏரிகள் மாசடைந்து அழியும் அபாய கட்டத்தை எட்டியிருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் 912 ஏரிகளும், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் 1083 ஏரிகளும் உள்ளன. பாலாற்றை ஒட்டிய பகுதிகளை தவிர,...

மூளைக்கட்டியை அலட்சியப்படுத்தினால் உயிருக்கே ஆபத்தாக முடியும் - அரசு ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் எச்சரிக்கை

மூளையில் ஏற்படும் கட்டிக்கான சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளாவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும் என சென்னை ஸ்டேன்லி அரசு மருத்துவமனை முதல்வர் மருத்துவர் பொன்னம்பல நமச்சிவாயம் எச்சரித்தார். மூளைக்கட்டிகளைப் பற்றியும் அதனால் ஏற்படும் பாதிப்புகள், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும்...

பெருமளவு கடன் சுமை ஆபத்தானது என்ற பிரதமர் மோடியின் கருத்துக்கு அமெரிக்க அமைச்சர் பாராட்டு

பெருமளவில் கடன் சுமை ஆபத்தானது என்று எச்சரிக்கும் விதத்தில் பிரதமர் மோடி பேசியதற்கு அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டீஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற 17வது ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் பேசிய மோடி, மற்ற நாடுகளை கடன் சுமையில்...

ஆபத்தை உணராமல் அருவிகளில் புகைப்படம் எடுக்க கூடாது - சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

நீலகிரி மாவட்டம் குன்னூரில், அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையை யொட்டி, குன்னூர் சுற்றுலாத் தளங்களுக்கு வருகை தரும் மக்கள், மலைப்பாதைகளில் உள்ள அருவிகளில் ஆபத்தை உணராமல் குளிக்கின்றனர். பாறைகளில் ஏறி புகைப்படம் எடுக்கும் சிலர் கீழே விழுந்து...