​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் 2 மணி நேரத்துக்கும் மேலாக ரயில் சேவை பாதிப்பு

பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு ரயில் அரக்கோணம் அருகே தடம் புரண்டதால், 2 மணி நேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. 27 காலிப்பெட்டிகளுடன் மேல்பாக்கம் அருகே வந்தபோது, ரயிலின் 15 மற்றும் 16வது பெட்டிகள் தடம் புரண்டு...

உ.பி.யில் பழுதடைந்த சாலையை பொதுமக்களுடன் இணைந்து சீரமைத்த மாநில அமைச்சர்

உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி மாவட்டத்தில் பழுதடைந்த சாலையை மாநில அமைச்சரே பொதுமக்களுடன் இணைந்து சீரமைத்துள்ளார். சுகைல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் ராஜ்பார் உத்தரப்பிரதேசத்தில் பாஜக கூட்டணியில் இடம்பெற்று மாநில அமைச்சராக உள்ளார். வாரணாசி மாவட்டத்தின் பத்தேபூர் கோண்டா என்னும் ஊரில் வாழ்ந்து...

டெல்லி அருங்காட்சியகத்தில் விராட்கோலியின் மெழுகுச்சிலை சேதம்

டெல்லியில் உள்ள மேடம் டுஸ்ஸாட் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் விராட்கோலியின் மெழுகுச்சிலை சேதமடைந்ததால் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது. புகழ்பெற்ற இந்த அருங்காட்சியகத்தில் கடந்த புதன் கிழமைதான் விராட் கோலியின் சிலை திறக்கப்பட்டது. ஆனால் அதற்குள்ளாகவே சிலையின் காதுபகுதியில் சிறிய சேதம் அடைந்துள்ளதால்...

கடல் அரிப்பு காரணமாக சேதமடைந்து வரும் துறைமுகப் பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் துறைமுகத்தில் தூண்டில் வளைவு இல்லாததால், விசைப்படகுகளை நிறுத்திவைக்கும் பகுதிகள் பல இடங்களில் சேதமடைந்து வருவதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தத் துறைமுகத்தின் பல பகுதிகள் கடல் அரிப்பு காரணமாக சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே...

ஈரோடு அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் வாழைமரங்கள் சேதம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் ஏராளமான வாழைமரங்கள் சேதமடைந்தன. நாகதேவன்பாளையம் ஊராட்சிக்குட்பட்டவெள்ளிங்காட்டுப்புதூர்,  முள்ளங்கரைஅய்யம்புதூர், செல்வபுரம்காலனி உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் தென்னை மரங்களும்  குலைதள்ளிய ஏராளமான வாழை மரங்களும் சேதமடைந்தன. செல்வபுரம் காலனியில்...

ஹவாய் தீவில் எரிமலை கக்கிய நெருப்பு குழம்புகளால் 87 வீடுகள் சேதம்

அமெரிக்காவின் ஹவாய் தீவில் எரிமலை கக்கிய நெருப்பு குழம்புகளால் 4 வாரத்தில் 87 வீடுகள் முற்றாக அழிந்துள்ளன. அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள Kilauea எரிமலை, 4 வாரங்களாக சீற்றத்துடன் தீக்குழம்புகளை கக்கி வருகிறது. எரிமலையிலிருந்து பீய்ச்சியடித்த தீக்குழம்புகள் ஆறாக பெருகி ஓடும்...

பாலக்கோடு அருகே புதையல் இருக்கலாம் எனக் கருதி பழமையான கல்கோட்டைகளை பள்ளம் தோண்டி சிதைக்கும் மர்ம நபர்கள்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பலநூறு ஆண்டுகள் பழமையான கல்கோட்டைகள் மற்றும் சிற்பங்கள் உள்ள இடங்களில் புதையல் இருப்பதாக எண்ணி சேதப்படுத்தும் மர்ம நபர்களிடமிருந்து கோட்டையை  பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாலக்கோடு அடுத்த வீரபத்திர துர்கம் சந்தைப்பேட்டை...

பள்ளிக்கரணையில் நிகழ்ந்த தீ விபத்தில் 20 வீடுகள் எரிந்து நாசம்

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் நிகழ்ந்த தீ விபத்தில் 20 வீடுகள் எரிந்து சேதமடைந்தன. நாராயணபுரம் செங்கழனி அம்மன் கோவில் தெருவில் திருவண்ணாமலை, செஞ்சி பகுதிகளை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் குடிசை வீடுகளில் வாடகைக்கு தங்கி உள்ளனர். இவர்கள் காலை வேலைக்குச் சென்றிருந்த நிலையில்...

தக்காளிகளை சாலையில் கொட்டி டிராக்டர் ஏற்றி சேதப்படுத்திய விவசாயிகள்

பீகாரில் விளைவித்த தக்காளிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அவற்றை சாலையில் கொட்டி சேதப்படுத்தி போராட்டம் நடத்தினர். தற்போதைய சூழலில் கடன் வாங்கி, விவசாயம் செய்து தக்காளியை விளைவித்ததாக அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், சந்தையில் உற்பத்தி செலவைக் கூட ஈடு செய்ய...

கனமழையால் சேதமடைந்திருந்த 2 மாடி கட்டிடம் இடிந்து விழும் காட்சி

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்று சரிந்து விழுந்து தரைமட்டமானது. ஆக்ராவில் இரு வாரங்களுக்கு முன்னர் பெய்த கனமழையில், தாஜ்கஞ்ச் ((tajganj))பகுதியில் இருந்த அந்த கட்டிடம் சேதமடைந்தது. இந்நிலையில் திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. அங்கு ஆட்கள் யாரும் இல்லாததால்...