​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த நடவடிக்கை - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கார்களில் சீட் பெல்ட் அணிவதையும், இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவதையும் முழுமையாகவும் முறையாகவும் அமல்படுத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், நீதிபதிகள்...

TVS குழும தலைவர் வேணு சீனிவாசனை மேலும் 3 வாரங்களுக்குக் கைது செய்யக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை மயிலாப்பூர் கோயிலில் பழமையான மயில் சிலையை மாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில், டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன், ஸ்தபதி முத்தையா உள்ளிட்டோரைக் கைது செய்ய கூடாது என்ற உத்தரவு 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பழமையான மயில்...

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரம், இடைத்தரகராக செயல்பட்ட நபர், இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவாரா?

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ((AgustaWestland)) ஹெலிகாப்டர் பேர ஊழலில் இடைத்தரகராக செயல்பட்ட நபரை, இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு ஐக்கிய அரபு அமீரக நீதிமன்றம் நேரடியான உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது விவிஐபி-களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்க அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம்...

எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்

எம்பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான குற்ற மற்றும் ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றம் சென்னையில் தொடங்கப்பட்டது.  97 லட்சம் ரூபாய் செலவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தின் முதல்மாடியில் அமைக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கான சிறப்பு நீதிமன்றத்தை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி....

ரபேல் ஒப்பந்தம் - அக்.10க்கு விசாரணை ஒத்திவைப்பு

ரபேல் போர் விமான ஒப்பந்தத்திற்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் 10ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்திய விமானப்படைக்கு ரபேல் போர் விமானம் வாங்க, முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், பிரான்ஸ் நாட்டோடு ஒப்பந்தம் போடப்பட்டது....

உயர்நீதிமன்றத்தை இழிவாக பேசியதாக கூறப்படும் புகாரில் ஹெச்.ராஜாவுக்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சம்மன்

உயர்நீதிமன்றம் குறித்து அவதூறான கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கில் வரும் 3 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ஹெச்.ராஜாவுக்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்துக்கு எதிரான தவறான கருத்துகளை தெரிவித்த ஹெச்.ராஜா மீது கிரிமினல்...

உயர்நீதிமன்றத்தை இழிவாகப் பேசியதாக ஹெச்.ராஜா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு

உயர்நீதிமன்றத்தை இழிவாகப் பேசியதாக பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் மீது 8 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யபுரத்தில், சனிக்கிழமையன்று தடையை மீறி நடந்த விநாயகர் ஊர்வலத்தில் பா.ஜ.க. தேசியச்...

நீதிமன்றம் குறித்த எனது பேச்சை எடிட் செய்து பரப்புகிறார்கள் - ஹெச்.ராஜா

நீதிமன்றம் குறித்து தான் பேசியதை எடிட் செய்து பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் விநாயகர் விஜர்சன  ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், இந்துக்களுக்காக குரல் கொடுப்பவர்களை இழிவுபடுத்தும்நோக்கில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக...

வரதட்சணைப் புகாரில் உடனடியாக கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்

வரதட்சணைப் புகாரில் உடனடியாக கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கி உள்ளது. வரதட்சணைக் கொடுமைப் புகார் அளிக்கப்பட்டால், அதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்த பின்னரே குற்றம்சாட்டப்பட்டவரைக் கைது செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்றத்தின் இரண்டு...

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் இன்று CBI நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்

குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 5 பேரும் சிபிஐ நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டனர். குட்கா முறைகேடு வழக்கில், கிடங்கு உரிமையாளர் மாதவராவ் அவர்களது கூட்டாளிகள் உமாசங்கர், சீனிவாசராவ், உணவுபாதுகாப்பு அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால்வரித்...