​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாட்டில் ஒரு புரட்சியை காணலாம் - மம்தா பானர்ஜி

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாட்டில் ஒரு புரட்சியை காணலாம் என்றும், மக்கள் பாஜகவை தோற்கடிப்பார்கள் என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவை வெளியேற்றி, நாட்டை காப்போம் என்பதே, வரும் மக்களவைத்தேர்தலில் தமது...

மல்லையா வெளிநாடு செல்லும் முன்னரே SBI வங்கியை எச்சரித்தேன் - உச்சநீதிமன்ற வழக்கறிஞர் தகவல்

தொழிலதிபர் மல்லையா நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு 4 நாட்களுக்கு முன்னர், எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகத்திடம் அது குறித்து தெரிவித்ததாக, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தெரிவித்துள்ளார். எஸ்.பி.ஐ. உள்ளிட்ட வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன்பெற்ற மல்லையா,...

அருண்ஜேட்லியை சந்திதேன் என விஜய் மல்லையா பேட்டி; அடிப்படையற்ற பொய்யான தகவல் என அருண்ஜேட்லி மறுப்பு

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவது குறித்த வழக்கில் டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுமென லண்டன் நீதிமன்றம் கூறியுள்ளது. இதனிடையே கடனை திருப்பி செலுத்துவது குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் பேசியதாக விஜய் மல்லையா கூறியுள்ளார்....

நாடு முழுவதும் இன்று ஆசிரியர்களுக்கு நன்றி கூறும் நாள்

முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான இன்று ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், ஆசிரியரின் தனிச்சிறப்பை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு... எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பார்கள். நமக்கு அகரத்தை சொல்லித் தந்து ஆக்கத்தை ஊக்கப்படுத்திய ஆசிரியர்களுக்கு நன்றியும் அன்பும் செலுத்தும் நாள் இந்த...

நள்ளிரவில் நாடு முழுவதும் களை கட்டிய கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

நள்ளிரவில் கண்ணன் அவதரித்த நிகழ்வையொட்டி நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.  உத்தரப்பிரதேசம் மாநிலம் மொரதாபாத்தில் தயிர்ப்பானைகளை உயரத்தில் கட்டி வைத்து உறியடிக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்துக் கொண்டனர். வெண்ணையும் தயிரும் திருடித் தின்ற கண்ணன் புகழைப்...

நாடு முழுவதும் இன்று கோகுலாஷ்டமி கொண்டாட்டம்

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது.  இந்த நன்னாளில் கண்ணனின் உன்னத லீலைகளில் சிலவற்றை காண்போம்.... கண்ணன் பிறந்ததைக் குறிக்கும் ஜன்மாஷ்டமி இன்று கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் அஷ்டமி திதியில் நள்ளிரவில் கண்ணன் அவதரித்ததாக கூறப்படுகிறது. இரவில் பிறந்ததால் கருமை நிறத்தில்...

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் 3.3 கோடி வழக்குகள் தேக்கம் : ராம்நாத் கோவிந்த்

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 3 கோடியே 30 லட்சம் வழக்குகள் தேங்கியிருப்பது கவலையளிப்பதாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். டெல்லியில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், தேசிய கருத்தரங்கில் பங்கேற்ற அவர், நீதியை நிலைநாட்டுவதால் இந்திய நீதித்துறை உலகம் முழுவதும்...

நாட்டில் உள்ள வில்லன் ஸ்டாலின் - வீட்டில் உள்ள வில்லன் தினகரன் : ஆர்.பி.உதயகுமார்

நாட்டில் உள்ள வில்லன் ஸ்டாலின் என்றால், வீட்டில் உள்ள வில்லன் டி.டி.வி.தினகரன் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். திருவண்ணாமலையில், கடந்த 5 நாட்களாக அரசின் முதலாம் ஆண்டு சாதனை விளக்க சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில்  பேசிய போது...

நாட்டிற்கு நேரு வழங்கிய பங்களிப்பை மறைத்துவிட முடியாது - மன்மோகன் சிங் பிரதமர் மோடிக்கு கடிதம்

மத்திய அரசு வரலாற்றைத் திரிக்கும் நடவடிக்கைகள் மூலம் நாட்டுக்கு ஜவகர்லால் நேரு அளித்த பங்களிப்பை மறைத்துவிட முடியாது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். டெல்லி தீன்மூர்த்தி பவனில் உள்ள ஜவகர்லால் நேரு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் இந்தியாவின் வேறு பிரதமர்கள்...

நாடு முழுவதும் கனமழை, வெள்ளம் தொடர்பான பாதிப்புகளால் இதுவரை 993 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்

நாடு முழுவதும் நடப்பு ஆண்டில் பருவமழைக் காலத்தில் கனமழை, வெள்ளம் தொடர்பான பாதிப்புகளில் சிக்கி இதுவரை 993 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளத்தில் கனமழை, வெள்ள பாதிப்புகளால் 387 பேர் உயிரிழந்துள்ளனர். 54 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம்,...