​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கஜா புயல் நாளை மாலை கரையைக் கடக்கவுள்ளதால் 5 மாவட்டகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  கஜா புயல் நாளை மாலை கரையைக் கடக்கவுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளதால், கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திருவாரூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை...

திருவண்ணாமலையில் நர்சிங் கல்லூரியில் பூட்டை உடைத்துக் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே நர்சிங் கல்லூரியில் பூட்டைஉடைத்து இரண்டு லட்ச ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. தெள்ளூர் கிராமத்தில் முஜிபுர்ரஹ்மான் என்பவருக்கு சொந்தமான தனியார் நர்சிங் கல்லூரி உள்ளது. தீபாவளிக்காக கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், காவலாளி குணசேகரன் மட்டும்...

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் ஆடியோ பதிவுகளை தடயவியல் சோதனைக்கு உட்படுத்த உத்தரவு

பாலியல் புகார் கூறிய திருவண்ணாமலை வேளாண்மை கல்லூரி மாணவி அளித்த 12 ஆடியோ பதிவுகளை தடயவியல் சோதனைக்குட்படுத்துமாறு மாவட்ட நீதிபதி மகிழேந்தி உத்தரவிட்டுள்ளார். வாழவச்சனூர் அரசு வேளாண் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்ற மாணவி, தனக்கு விடுதி காப்பாளரும் பேராசிரியருமான தங்கபாண்டியன் பாலியல்...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இரு இளைஞர்கள் கைது

புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.  தவளக்குப்பம்-நல்லவாடு செல்லும் சாலையில் கல்லூரி மாணவர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு...

மருந்துக் கடையில் போதை மாத்திரை கேட்டு இரு கல்லூரி மாணவர்கள் தாக்குதல்

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் மருந்துக் கடையில் போதை மாத்திரை கேட்டு இரு கல்லூரி மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பேருந்து நிலையத்தில் உள்ள மருந்து கடைக்கு சென்ற கல்லூரி மாணவர்கள் சிலர்,  தூக்க...

கோவை அரசு கலைக்கல்லூரி முதுகலை மாணவி கல்லூரியில் இருந்து இடைநீக்கம்

கோவை அரசு கலைக்கல்லூரியில் அனுமதியின்றி மாணவர்களை அழைத்து கூட்டம் நடத்தியதாக முதலாம் ஆண்டு முதுகலை மாணவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாலதி என்ற அந்த மாணவி கடந்த மாதம் 28ஆம் தேதி பகத்சிங் பிறந்த தினத்தன்று பிற வகுப்பிலுள்ள மாணவ, மாணவிகளை அழைத்து அனுமதியின்றி...

மாடல் அழகியாகும் கனவுடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

மாடல் அழகியாவதற்காக மும்பை சென்ற பெண்ணை கொலை செய்து, உடலை சூட்கேசில் அடைத்து வீசியவனை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தானைச் சேர்ந்த மன்சி தீக்சித், மாடல் அழகியாக வேண்டும் என்று கனவோடு மும்பை சென்றார். அங்கு அந்தேரியைச் சேர்ந்த முஸாமில் சையத் என்ற...

உத்தரப்பிரதேசத்தில் புதிதாகக் கட்டப்பட்ட கல்லூரி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாகக் கட்டப்பட்ட கல்லூரி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். ஷாஜஹான்பூர் என்ற இடத்தில் கல்லூரி ஒன்று கட்டப்பட்டது. நேற்று அதன் கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில்...

கல்லூரியில் மீண்டும் சேர அனுமதிக்குமாறு மாணவி கோரிக்கை... முடிவில் மாற்றமில்லை - துணை வேந்தர்

திருவண்ணாமலை வேளாண் கல்லூரி மாணவி தம்மை அதே கல்லூரியில் படிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிய நிலையில், பல்கலைக்கழகம் எடுத்த முடிவில் மாற்றமில்லை என துணை வேந்தர் கூறியுள்ளார். உதவி பேராசிரியர் உள்ளிட்டோர் மீது பாலியல் புகாரளித்த அந்த மாணவியை திருச்சி கல்லூரிக்கு...

புதுச்சேரியில் கல்லூரி மாணவரின் கேள்விக்கு பதிலளிக்காத துணைநிலை ஆளுநர்

புதுச்சேரியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினவிழாவில், துணை நிலை ஆளுநரிடம் அரசின் செயல்பாடு குறித்து மாணவர்கள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பியதால், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும், அவரைத் தொடர்ந்து முதலமைச்சர் உள்ளிட்டோரும் விழாவில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.  புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும்...