​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திமுக எம்.பி. தயாநிதி மாறனுக்கு எதிராக தமிழக அரசு அவதூறு வழக்கு

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்புபடுத்தி பேசிய விவகாரத்தில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. நாளிதழில் கடந்த 31ஆம் தேதி வெளியான செய்தியில், டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஜெயகுமாருக்கு தொடர்பு இருப்பதாகவும், சிபிஐ விசாரணைக்கு...

மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனருக்கு அபராதம்

கள்ளக்குறிச்சி அருகே மதுபோதையில் அதிவேகமாக லாரி ஓட்டி வந்து கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியதாக ஓட்டுநருக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சின்னசேலம் அருகே கணியமூர் கைகாட்டி என்ற இடத்தில் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகமாக வந்த...

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு

செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 ஆசிரியர்களை குற்றவாளிகள் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  ஆசிரியர்கள் நாகராஜ், புகழேந்தி ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில்  2012 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டனர்....

Coldbest PC மருந்துக்கு தடை - அவசர அறிவிப்பு

குழந்தைகளுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் நச்சுப்பொருள் உள்ளதால், Coldbest PC எனப்படும் இருமல் சிரப் மருந்தை விநியோகிக்கவோ, விற்கவோ, வாங்கவோ கூடாது என அவசர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த டிஜிட்டல் விஷன் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், Coldbest PC எனப்படும்...

பட்டினப்பாக்கம்-பெசன்ட் நகர் சாலையை சீர் செய்வது குறித்து அறிக்கை தர உத்தரவு

சென்னை பட்டினப்பாக்கம் முதல் பெசன்ட் நகர் வரையிலான சாலையை சீரமைப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெரினா கடற்கரையில் நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள் இன்று மீண்டும் விசாரணை வந்தன. அப்போது, லூப்...

நாடு முழுவதும் வரவேற்பை பெற்றுள்ள சூரிய மின் சக்தி உற்பத்தி

பிரேசிலில் பச்சை பசேல் என்று விளைந்து நிற்கும் பயிர்கள் மற்றும் கரும்புத் தோட்டங்களுக்கு இடையே குறைந்த செலவிலான சூரிய மின்சக்தி உற்பத்தியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விவசாய நகரமான போர்டோ பெலிஸில் ((Porto Feliz)) அமைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சோலார் பேனல்கள்...

அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்து பிரக்யான் ஓஜா ஓய்வு

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஒஜா, அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2008ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், இந்திய அணிக்காக 2013ம் ஆண்டு வரை பல போட்டிகளில் விளையாடியுள்ளார். பந்துவீச்சு மீதான சந்தேகத்தால்...

சீனாவில் சிறைச்சாலைகளுக்கும் பரவிய கொரோனா வைரஸ்

சீனாவில் சிறைச்சாலைகளிலும் கொரோனா பரவியதை அடுத்து, சிறை போன்ற வளாகங்களில் கொத்து கொத்தாக வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. சீனாவில் 450-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் மற்றும் போலீசாருக்கு கொரானா தொற்று இருப்பதாக சீன அரசு தெரிவித்துள்ளது. சிறைகளை பொறுத்தவரையில், முதன்...

ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் கட்டணம் உயருகிறது

சென்னை மற்றும் புறநகர் ரயில் நிலையங்களில் வரும் ஏப்ரல் மாதம் முதல் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் கூடுதலாக 5 ரூபாய் உயர்த்தப்படுகிறது. நாடுமுழுவதும் பயணிகள் அல்லாதவர்களின் கூட்டத்தை ரயில் நிலையங்களில் கட்டுப்படுத்தும் வகையில் முடிவு எடுத்துக்கொள்ள ரயில்வே வாரியம், அந்தந்த கோட்டங்களுக்கு அனுமதி...

#TeamQuaden: தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் 9 வயது சிறுவன்

பள்ளியில் தனது உருவத்தை வைத்து கேலி செய்வதால் தற்கொலை செய்து கொள்ள தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் 9 வயது சிறுவனின் வீடியோ வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்...