​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விபத்துக்குள்ளான பெண்ணுக்கு உதவி செய்வது போல நடித்து செல்போன் திருட்டு

திருவள்ளூர் மாவட்டத்தில் விபத்தில் காயமுற்ற பெண்ணை காப்பாற்றுவது போல நடித்து செல்போனை திருடிச் சென்ற திருடர்களை சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டையைச் சேர்ந்த அனிதா, கடந்த 8-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது தண்ணீர்குளம்...

ஆப்பிள் நிறுவனம் தனது செல்போன்களுக்கான மின்கல தொழில் நுட்பத்தை மேம்படுத்த புதிய நடவடிக்கை

ஆப்பிள் நிறுவனம் தனது செல்போன்களுக்கான மின்கல தொழில் நுட்பத்தை மேம்படுத்த புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.  செல்போன்களின் மின்சக்தி செயல்பாட்டிற்கான சிப்களை தயாரித்து தரும் ஜெர்மனியைச் சேர்ந்த டயலாக் நிறுவனத்தை ஆப்பிள் கையகப்படுத்த உள்ளது. 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து டயலாக் நிறுவனத்தின்...

96' திரைப்படத்தை செல்போனில் படம்பிடித்த கல்லூரி மாணவர்கள்

சென்னையில், விஜய் சேதுபதி நடித்த '96' திரைப்படம் ஓடிய திரையரங்கில், செல்போனில் படத்தை பதிவு செய்த கல்லூரி மாணவர்கள் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். உதயம் திரையரங்கில் இன்று காலைக் காட்சியின்போது, '96' திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தபோது, 2 பேர் தங்கள் செல்போனில் படத்தை...

செல்போன் விற்பனையில் போட்டியாளர்களை மிஞ்ச புதிய வழிமுறையை கையாண்டுள்ளது சாம்சாங்

செல்போன் விற்பனையில் போட்டியாளர்களை மிஞ்ச புதிய வழிமுறையை கையாண்டுள்ளது சாம்சாங் நிறுவனம். இதற்காக நெதர்லாந்து நாட்டில் உள்ள அப்பெல் என்ற கிராமத்தை தேர்ந்தெடுத்த அந்த நிறுவனம், அங்கு வசிக்கும் 312 பேரில் 50  பேருக்கு தனது புதிய செல்போனான கேலெக்சி  எஸ் 9...

விசாரணை அதிகாரியிடம் செல்போனை ஒப்படைக்க மறுத்த வழக்கில் மாலத்தீவின் முன்னாள் அதிபர் ஜாமீனில் விடுதலை

ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் குற்றம் சாட்டப்பட்ட மாலத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல் கயூம் விடுதலை செய்யப்பட்டார். மாலத்தீவுகளில் கடந்த 1978ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தவர் மம்மூன் அப்துல் கயூம். இவர், தனது சகோதரரும், தற்போதைய அதிபருமான யாமின்...

இண்டிகோ விமானத்தில் செல்போனுக்கு சார்ஜ் செய்ய விமானிகள் அறைக்குள் நுழைய முயன்ற பயணி

இண்டிகோ விமானத்தில் செல்போனுக்கு சார்ஜ்  செய்வதற்காக விமானிகள் அறைக்குள் நுழைய முயன்ற பயணி மும்பை விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டார். கடந்த 24ஆம் தேதி இண்டிகோவின் 6E-395 என்ற விமானம் மும்பையில் இருந்து கொல்கத்தா புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் ஏறிய...

செல்போன் திருடியதாகக் கூறி 15 வயது சிறுவன் அடித்துக் கொலை

கரூர் அருகே செல்போன் திருடியதாக 15 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூரை அடுத்த அல்லிக்கவுண்டனூரைச் சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் பாலசுப்பிரமணி. 8ஆம் வகுப்பு வரை படித்த அவர் அதன்பின்னர் பள்ளிக்குச்...

சீருடையிலிருந்த ஆயுதப்படை காவலரிடம் செல்போன் பறித்த கும்பல் கைது

சென்னை மந்தைவெளியில் சீருடையில் இருந்த ஆயுதப்படை காவலரிடம் செல்போனை பறித்துச் சென்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஆயுதப்படை காவலரான மணிமாறன், கடந்த 2-ஆம் தேதி அதிகாலை சீருடையுடன் வீட்டிலிருந்து பணிக்கு புறப்பட்டபோது, பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 3...

பெற்றோர் செல்போனை வாங்கிக் கொண்டதால் மாணவி விபரீத முடிவு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பெற்றோர் செல்போனை வாங்கிக் கொண்டதால்,12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருப்புக்கோட்டை நாடார் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பரது ஒரே மகளான நித்யபிரியா, அருப்புக்கோட்டையில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். 10ஆம்...

கார் ஓட்டுநர்கள் செல்போனை தொடாமலே பயன்படுத்த உதவும் கிரிஸ் தொழில்நுட்பம்

கார் ஓட்டுநர்கள் செல்போன்களை தொடாமலே தொலைபேசி அழைப்பு விடுக்கவும், குறுஞ்செய்தி அனுப்பவும், பாடல் கேட்பதற்கும் உதவும் கிரிஸ் தொழில்நுட்பம் விரைவில் இந்தியாவிற்கு வரவுள்ளது. கார் ஓட்டுவோர் நெரிசல் மிக்க சாலைகளில் பயணிக்கும்போது, செல்போனை தொடாமலே, அதை பயன்படுத்தும் தொழில்நுட்பத்துக்கு கிரிஸ் என பெயரிடப்பட்டு,...