​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அ.ம.மு.க. கவுன்சிலர்கள் இருவர் கடத்தல் என போலீசில் புகார்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அமமுக கவுன்சிலர்கள் இருவர் கடத்தப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில், அமமுக சார்பில்,13 வது வார்டு கவுன்சிலராக சுப்புலெட்சுமியும், 14 வது வார்டு கவுன்சிலராக மாடத்தியும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள்...

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு..!

இரண்டு நாட்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்றும், இன்றும் 2 நாள்கள் எண்ணப்பட்டன. மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 513 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 512க்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அதிமுக கூட்டணி...

முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் வெட்டிக் கொலை - உறவினர்கள் சாலை மறியல்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் வெட்டி கொல்லப்பட்டார். மேலூரை அடுத்த அ.வல்லாளபட்டியை சேர்ந்தவர் அசோகன். அமமுக பிரமுகரான இவர் இன்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது 8 பேர் கும்பலால் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக...

அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கு தடை கோரிய வழக்கில் நீதிபதி கண்டனம்

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என டிடிவி தினகரனின் கட்சியை பதிவு செய்ய தடை விதிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அரசியல் கட்சியாக  பதிவு செய்ய தடை விதிக்க...

காவலர் போல் வேடமிட்டு பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த அமமுக பிரமுகர்

சேலம் மாவட்டத்தில், காவலர் போல் வேடமிட்டு, பொதுமக்களை மிரட்டி பணம் வசூலித்த அமமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார். அஸ்தம்பட்டி, சின்ன திருப்பதி பகுதியில் நேற்றிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடிபட்டபோது, அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். காருக்குள் காவல்துறையினர்...

டிடிவி தினகரன் சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் - தங்கதமிழ்செல்வன்

தங்கத்தமிழ்ச்செல்வன், இன்று காலை, மதுரை விமான நிலையத்தில், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தாம் எந்த கட்சியிலும் இணையப் போவதில்லை என்றும், யாரும் தம்மிடம் பேசவில்லை என்றார். உள் அரங்க சந்திப்புகளை வெளியில் சொல்லும் பண்பாடற்றவராக, டிடிவி தினகரன் இருப்பதாக, தங்கத்தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டினார். 18...

வாங்கிய கடனுக்காக இளைஞரை கடத்தி துன்புறுத்திய அமமுகவினர்

சென்னையில், வாங்கிய கடனுக்காக இளைஞரை காரில் கடத்தி அரிவாளால் தாக்கி துன்புறுத்திய அமமுக-வைச் சேர்ந்த இருவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மண்ணடியை சேர்ந்த ரஜீ ஷேக் ஜான் என்பவர் வேளச்சேரியில் விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். இவரை காணவில்லை எனவும்,...

பூத் ஏஜெண்டுகள் கூட அமமுகவுக்கு வாக்களிக்கவில்லையா? -டிடிவி தினகரன்

300 வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கு ஒரு வாக்கு கூட பதிவாகாததன் மர்மம் என்ன? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பூத் ஏஜெண்டுகள் கூட அமமுகவுக்கு வாக்களிக்கவில்லையா...

நடைபயிற்சி சென்ற அமமுக பிரமுகர் வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபயிற்சி சென்ற அமமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பாச்சேத்தி அருகே ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்தவர் அமமுக ஒன்றியச் செயலாளர் சரவணன். தற்போது மானாமதுரையில் வசித்து வரும் இவர் பைபாஸ் சாலையில் இன்று...

"நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரகுமார்" என்ற கல்வெட்டால் சர்ச்சை

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கோயில் கல்வெட்டில் ஓ.பி.ரவீந்திரகுமார் பெயருடன் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் என்று இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குச்சனூரில் உள்ள காசிஸ்ரீ அன்னபூரணி கோவில் ராஜகோபுர கும்பாபிஷேகத்தை ஒட்டி கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பேருதவி புரிந்தவர்கள் என ஜெயலலிதா,...