​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இண்டிகோ நிறுவனத்தின் கணினி வலையமைப்பு ஒன்றரை மணி நேரம் வேலை செய்யாததால் நாடு முழுவதும் பயணிகள் காத்திருப்பு

இண்டிகோ நிறுவனத்தின் கணினி வலையமைப்பு ஒன்றரை மணி நேரம் வேலை செய்யாததால் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் 41விழுக்காட்டை இண்டிகோ நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் கணினி வலையமைப்பு...

ஈரான் வான்பரப்பில் கூடுதல் கவனத்துடன் விமானங்களை இயக்குமாறு அமெரிக்கா எச்சரிக்கை

ஈரான் வான்பரப்பில் கூடுதல் கவனத்துடன் விமானங்களை இயக்குமாறு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா, அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் இருநாடுகள் இடையே மீண்டும் பகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து...

உலகில் பெண் விமானிகள் அதிகமாக பணியாற்றும் நாடு இந்தியா எனத் தகவல்

உலகில் பெண் விமானிகளை அதிக அளவில் பணியமர்த்தும் நாடாக இந்தியா உள்ளது. சர்வதேச அளவில் பெண் விமானிகளின் எண்ணிக்கை 5 சதவீதமாக உள்ள நிலையில், இந்திய விமானிகளில் 12 சதவீதம் பேர் பெண் விமானிகளாக உள்ளனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை...

பறக்கும் போது மனிதக் கழிவுகளைக் கொட்டும் விமான நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்

பறக்கும் போது மனிதக் கழிவுகளைக் கொட்டும் விமான நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு டெல்லி விமான நிலையம் அருகே உள்ள தமது வீட்டின் மீது அங்கு தரையிறங்கும்...

விமானப் பயணிகளை இறக்கிவிட்ட விமான நிறுவனங்கள் ரூ.35 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவு

சண்டிகரில் விமானப் பயணிகளை இறக்கிவிட்ட விமான நிறுவனங்கள் 35 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி, மணாலி மிட்டல் என்பவர் தமது 11 மற்றும் 3 வயதுடைய 2 குழந்தைகளுடன் சண்டிகர் சர்வதேச...

ஆஸ்திரேலியாவின் ஏர் ஆம்புலன்ஸ் விமான சேவைப் பிரிவை பார்வையிட்டார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

ஆஸ்திரேலியாவின் ஏர் ஆம்புலன்ஸ் விமான சேவையை போல  தமிழகத்தில்  தொடங்குவது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  தமிழகத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை  குறித்த தகவல் பரிமாற்றத்துக்காக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர்...

இந்தியாவில் விமான நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கவில்லை என டிஜிசிஏ விளக்கம்

இந்தியாவில் விமான நிறுவனங்கள் அளவுக்கு அதிகமான கட்டணங்கள் எதையும் பயணிகளிடம் வசூலிக்கவில்லை என, டெல்லி உயர்நீதிமன்றத்தில், விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. விமான கட்டணங்களுக்கான உச்சவரம்பை நிர்ணயிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேவை அதிகரிக்கும்...

கேரள வெள்ளத்தை சாதகமாக்கி விமானக் கட்டணம் உயர்த்தப்பட்டதாக புகார்

கேரளவில் கனமழை வெள்ளத்தை சாதகமாக்கி விமானக் கட்டணத்தை சில நிறுவனங்கள் பல மடங்கு உயர்த்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, உச்சபட்ச கட்டணத்தை மீற வேண்டாம் என விமானப் போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது. வழக்கமாக 4 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும் விமான டிக்கெட் விலை தற்போது...

அனுமதியின்றி மெக்கானிக் எடுத்துச் சென்ற அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் விபத்தில் சிக்கி தீப்பற்றியது

அமெரிக்காவில் அனுமதியின்றி மெக்கானிக் எடுத்துச் சென்ற அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் சியாட்டில் அருகே விபத்தில் சிக்கியது. சியாட்டில் - டகோமா (Seattle - Takoma) விமான நிலையத்தில் இருந்து அந்நாட்டு நேரப்படி வெள்ளியன்று இரவு அலாஸ்கா ஏர்லைன்சின் F-15s என்ற பயணிகளற்ற விமானத்தை...

ஏர் இந்தியா விமானங்கள் பாதுகாப்பானவை தானா? நிர்வாகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் விமானிகள் கேள்வி

ஏர் இந்தியா விமானங்கள் பயணிகளுக்கு பாதுகாப்பான நிலையில்தான் உள்ளனவா என அதில் பணிபுரியும் விமானிகளே நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பி உள்ளனர். அகில இந்திய விமானிகள் சங்கத்தின் சார்பில், ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக ஊழியர்களுக்கான ஜூலை மாத...