​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்தியா-பாக். இடையே ரூ. 2.68 லட்சம் கோடி வர்த்தக இழப்பு

இந்தியாவும், பாகிஸ்தானும், தங்களுக்கிடையே, 2 லட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகத்தை இழந்திருப்பதாக, உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளிலும் நிலவும், பதற்றம் நிறைந்த அரசியல் சூழல், பரஸ்பரம் இயல்பான வர்த்தக உறவை மேம்படுத்திக்கொள்ளாதது ஆகியவையே, இந்தியா -...

உலக வங்கி மேற்பார்வை செய்வதால் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை : அரசு

உலக வங்கி மேற்பார்வையில் நடைபெறும் ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலைத் திட்டத்தில், முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக சார்பில்...

கேரள மறுசீரமைப்பு பணிகளுக்கு உலக வங்கியிடம் 3 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற முடிவு : பினராயி விஜயன்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க உலக வங்கியிடம் 3 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கேட்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவை சீரமைக்கத் தேவையான நிதியை திரட்ட பல்வேறு...

உலகில் வெள்ளத்தால் நேரிடும் உயிரிழப்புகளில் 5 இல் 1 பங்கு இந்தியாவில் நேரிடுவதாக தகவல்

உலகில் வெள்ளத்தால் நேரிடும் உயிரிழப்புகளில் ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவில் நேரிடுவதாக புள்ளிவிவரம் ஒன்றில் தெரியவந்துள்ளது. பருவநிலை மாற்றம் குறித்து உலக வங்கி மேற்கொண்டுள்ள கணக்கெடுப்பில் இந்த தகவல் இடம்பெற்றிருப்பதாக, மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 1953 முதல் 2017-ஆம் ஆண்டு...

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு - உலக வங்கி

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளே, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதாக, உலக வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பான உலக வங்கியின் ஆய்வறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை 80 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. பாலியல்...

கச்சா எண்ணெய் விலை 20 சதவீதம் வரை உயரும் என உலக வங்கி கணிப்பு

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை 20விழுக்காடு வரை உயரும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டில் கச்சா எண்ணெயின் சராசரி விலை ஒரு பீப்பாய்க்கு 53டாலராக இருந்தது. பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை அதிகரிப்பு, எண்ணெய் வழங்கலில் எண்ணெய் நிறுவனங்கள்...

19 கோடி இந்தியர்களுக்கு வங்கியில் கணக்கு இல்லை - உலக வங்கி

19 கோடி இந்தியர்களுக்கு வங்கியில் கணக்கு இல்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் கிட்டதட்ட பாதிக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் செயல்படாத கணக்குகளாக இருப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் ஜன்தன் யோஜனா போன்ற திட்டங்களால் 31 கோடி...

பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரியால் சுணங்கிய இந்திய பொருளாதாரம் மீண்டுவிட்டது - உலக வங்கி

பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றால் சுணங்கிய இந்திய பொருளாதாரம் மீண்டுவிட்டதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. கறுப்புப்பணம், கள்ளநோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிப்பதற்காக, கடந்த 2016ஆம் ஆண்டில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதேபோல்,...

2018-2019இல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3%ஆக இருக்கும் - உலக வங்கி கணிப்பு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2018-2019நிதியாண்டில் ஏழு புள்ளி மூன்று விழுக்காடாகவும், 2019-2020நிதியாண்டில் ஏழரை விழுக்காடாகவும் இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவு படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஒரே சரக்கு சேவை வரி முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது....