​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திமிங்கலங்களை காண நடுக்கடலுக்குச் செல்லும் சாகசப்பிரியர்கள்

பிரான்சின் ரீயூனியன் தீவுப் பகுதியில் காணப்படும் ஒரு வகை திமிங்கலங்களை கண்டு ரசிக்க சாகசப்பிரியர்கள் நடுக்கடலுக்கு பயணித்து வருகின்றனர். இந்தியப் பெருங்கடலில் பிரான்சுக்கு சொந்தமான அந்த தீவின் அருகே ஹம்ப்பேக் வகை திமிங்கலங்கள் ((Humpback whale)) இனப்பெருக்கத்துக்காக வந்து சேரும். இவற்றின் நடமாட்டத்தை...

படகுக்கு சில அடி தூரத்தில் துள்ளிக் குதித்த திமிங்கலம்

கோஸ்டா ரிக்கா நாட்டில் திமிங்கலம் ஒன்றின் உற்சாகத் துள்ளலில் இருந்து சுற்றுலா பயணிகள் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் நடந்துள்ளது. குய்போஸ் என்ற கடல் பகுதியில் ஹம்பக் வகை திமிங்கலத்தை வேடிக்கை பார்ப்பதற்காக சிறு சிறு படகுகளில் சுற்றுலா பயணிகள் கடலுக்குள் சென்றனர்....

ஹம்பக் திமிங்கலத்துடன் விளையாடிய நீர்மூழ்கி வீரர்

ரஷ்யாவில் நடுக்கடலில் திமிங்கலம் ஒன்று நீர்மூழ்கி வீரருடன் விளையாடிய சுகககவாரசியக் காட்சிகள் வெளியாகி உள்ளன. மாஸ்கோவைச் சேர்ந்த மைக் கோரஸ்டலவ் ((Mike Korostelev)) என்ற நீர்மூழ்கி வீரர் ஹம்பக் வகை திமிங்கலங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். கிழக்கு சைபீரியக் கடல் பகுதிக்குச்...

உலகின் மிகப் பெரிய பாலூட்டியான திமிங்கலத்தை முத்தமிட்டு மகிழ்ந்த ஆராய்ச்சியாளர்கள்

உலகின் மிகப் பெரிய பாலூட்டிகளில் ஒன்றான கிரே திமிங்கலம் மனிதர்களுடன் கொஞ்சி விளையாடிய வீடியோ வெளியாகி உள்ளது. வடக்கு பசிபிக் கடலில் சில ஆராய்ச்சியாளர்களும், சார்லஸ் ஹேம்மர் என்ற ஒளிப்பதிவாளரும் படகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கிரே திமிங்கலம் ஒன்றைக் கண்ட...

அமெரிக்காவில் மீன்பிடிப் படகின் மிக அருகில் துள்ளிக் குதித்துச் சென்ற திமிங்கலம்

அமெரிக்காவில் மீன்பிடிப் படகிற்கு சில அடி தூரத்தில் திமிங்கலம் துள்ளிக் குதித்துச் சென்றது படகில் இருந்தவர்களை மட்டுமின்றி பார்ப்பவர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. கலிபோர்னியாவில் உள்ள மாண்டரே என்ற துறைமுகப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் பெரிய படகில் சென்று மீன்பிடித்துக்...

கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கி உயிருக்குப் போராடிய திமிங்கலங்கள்

அர்ஜென்டினா நாட்டு கடல் பகுதியில் கரை ஒதுங்கி உயிருக்குப் போராடிய கொலைகாரத் திமிங்கலங்களை பொதுமக்கள் மீட்டு மீண்டும் கடலுக்குள் விட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் மார் டி அஜோ மற்றும் வில்லா கெஸல் ((Mar de Ajo, Villa Gesell)) போன்ற கடற்கரைப்...

சுற்றுலா பயணிகளின் படகு அருகே துள்ளிக்குதித்த திமிங்கலம்

ஆஸ்திரேலியாவில் தன்னைப் பார்க்க விரும்பியவர்களுக்கு படகின் அருகில் துள்ளிக்குதித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது திமிங்கலம். ஒவ்வொரு ஆண்டும் அண்டார்க்டிகா பகுதியில் இருந்து, ஆஸ்திரேலிய கடற்கரைக்கு ஹம்பேக் வகைத் திமிங்கலங்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டு சிட்னி கடற்கரை பகுதியில் சில திமிங்கலங்கள் தென்பட்டதைத்...

ஆஸ்திரேலியாவில் ஹம்பக் திமிங்கலத்துடன் செல்ஃபி எடுத்த இளைஞர்

ஆஸ்திரேலியாவில் ஹம்பக் வகை திமிங்கலத்துடன் சேர்ந்து இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுத்த சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆடம் ஸ்டர்ன் ((Adam Stern))  என்ற அந்த இளைஞர் பாலினேஸியா ((Polynesia)) பகுதியில் கடலுக்கு அடியில் நண்பர்களுடன் நீந்திச் சென்றபோது இரண்டு...

பெரா தீவில், அரை மணி நேரத்தில் வேட்டையாடப்பட்ட 180 திமிங்கிலங்கள்

பெரோ((Faroe)) தீவில், அரை மணி நேரத்தில், 180 திமிங்கிலங்கள் வேட்டையாட்டப்பட்ட நிகழ்வால், கடற்கரை பகுதி முழுவதும் ரத்த மயமாக காட்சியளித்தது. பிரிட்டனுக்கு வடக்கே, அட்லாண்டிக் பெருங்கடற்பரப்பில் அமைந்திருக்கும் தீவு நாடு, பெரோ((Faroe)).... இங்கு, சாண்டாவாகு((Sandavágu)) என்ற கடற்கரை கிராமத்தில், திமிங்கில வேட்டை பிரசித்தமாக...

ஜப்பான் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய நீலத் திமிங்கலம்

ஜப்பானில் நீலத்திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. காமக்குரா (( Kamakura)) என்ற இடத்தில் கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய அந்த திமிங்கலம் சுமார் 35 அடி நீளமுள்ளதாகக் காணப்பட்டது. இதையடுத்து திமிங்கலத்தின் எலும்புகளை முழுமையாக எடுத்து அருங்காட்சியகத்தில் வைக்கும் வகையில்...