​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையகளில் திரிணாமூல் - பாஜக தொண்டர்கள் மோதல்

மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பாரதிய ஜனதாவும், மார்க்சிஸ் கட்சி மூன்றாம் இடத்திலும் முன்னிலையில் உள்ளன. இந்நிலையில், பிர்பும் (Birbum) என்ற இடத்தில் உள்ள வாக்கு எண்ணும்...

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் வன்முறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கடத்தல்

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலின்போது, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்திய கும்பல் ஒன்று, மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை தூக்கிச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்கம் மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது, நடைபெற்ற வன்முறையில் 14க்கும் மேற்பட்டோர்...

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் வன்முறையில் 8 பேர் பலி

மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தல் வன்முறைகளில் 8 பேர் உயிரிழந்தனர்.  வடக்கு பர்கானா மாவட்டத்தில் திரினாமூல் காங்கிரஸ் கட்சியினரால் மார்க்சிஸ்ட் தொண்டரின் வீடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டதில் அவரும், அவரது மனைவியும் உயிரிழந்தனர். குக்துலி ((Kukthuli)) என்ற இடத்தில் திரினாமூல் காங்கிரஸ்...

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலின் போது வன்முறை.. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் எதிர்கட்சியினரை அடித்து விரட்டுவதாக புகார்..

மேற்கு வங்க மாநிலத்தில் கடும் வன்முறைக்களுக்கிடையே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது.  பங்கர் ((Bhangar)) என்ற இடத்தில் திரினாமூல் காங்கிரஸ் கட்சியினர் வாக்குச் சாவடியை கைப்பற்றிவிட்டதாகக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர்கள் மரக்கிளைகளை உடைத்து எடுத்துக்கொண்டு தாக்குவதற்கு ஓடினர்.  பங்கர் ((Bhangar)) பகுதியில்...

பல்வேறு குழப்பங்களுக்கு இடையே மேற்கு வங்கத்தில் நாளை உள்ளாட்சித் தேர்தல்

மேற்கு வங்கத்தில் பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு பலத்த பாதுகாப்புடன் திங்கள் கிழமை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. மே 1, 3 மற்றும் 5 ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே ஏற்பட்ட...

பாஜகவிற்கு எதிரான கூட்டணியில் காங். ஒரு கூட்டாளியாக இணையலாம் - மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

பாஜகவிற்கு எதிரான மெகா கூட்டணியில் காங்கிரஸ் ஒரு கூட்டாளியாக இணையலாமே தவிர, தலைவராக அல்ல என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை அகற்ற கண்டனத் தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் முயற்சித்தது தவறானது என்றும்...

மேற்கு வங்கத்தில் ஊராட்சித் தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங் - பாஜக தொண்டர்கள் மோதல், ஒருவர் உயிரிழப்பு

மேற்கு வங்கத்தில் ஊராட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது திரிணாமுல் காங்கிரஸ், பாஜக தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். மேற்கு வங்க மாநிலத்தில் ஊராட்சித் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும்போது பல்வேறு இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக தொண்டர்கள் ஒருவரையொருவர்...

மேற்கு வங்க மாநிலத்தில் புயல் பாதிப்பில் 10 பேர் பலி

மேற்கு வங்க மாநிலத்தில் கொட்டி வரும் புயல் மழையால், 10 பேர் உயிரிழந்துள்ளனர். கொல்கத்தா, ஹவுரா நகரங்களில் சாலைகள் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளன. 98 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வரும் பலத்த காற்றின் காரணமாக, மின்கம்பங்களும், மரங்களும் சாய்ந்தன. இதனால்  மின்வினியோகம்...

கொல்கத்தாவில் மாநில தேர்தல் ஆணையத்திற்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பாக பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர். உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுத்தாக்கலுக்கான அவகாசத்தை முதலில் நீட்டித்த தேர்தல் ஆணையம் பின்னர் இந்த உத்தரவை ரத்து செய்தது.w மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஒருதலைப்பட்சமாக...

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போது வன்முறை

மேற்கு வங்கத்தில், உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கலுக்கலின் போது ஏற்பட்ட வன்முறையைக் கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசி நாளான கடந்த 6 ஆம் தேதி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், பல...